என் பசங்க அதுக்காக அசிங்கப்படுத்துவானுங்க..கடுப்பா இருக்கும்!! ரவி மோகன்

Gossip Today Aarti Ravi Ravi Mohan
By Edward May 16, 2025 06:30 AM GMT
Report

ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து

நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கு நீதி மன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கெனிஷா என்பவருடன் ரவி மோகன் நெருக்கமாக பழகி வருவதாக கிசுகிசு எழுந்தது. சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமண விழாவில் ரவி மோகன் கெனிஷாவுடன் ஜோடியாக வந்திருந்தார்.

என் பசங்க அதுக்காக அசிங்கப்படுத்துவானுங்க..கடுப்பா இருக்கும்!! ரவி மோகன் | Ravi Mohan Open Sons Trolls Anything Doing Bad

இதன்பின் இருவரும் காதலித்து வருவது உண்மை தான் என பலரும் உறுதியாகவும் கூறி வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஜோடியாக வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஆர்த்தி, ஒரு அறிக்கை வெளியிட்டு பதிலடி கொடுத்தார். அதன்பின் ரவி மோகன் 4 பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கையை வெளியிட்டு விளக்கம் அளித்திருந்தார்.

என் பசங்க

இந்நிலையில், ரவி மோகன் கலந்து கொண்டு தன் முன்னாள் மனைவி ஆர்த்தி பற்றி பேசியது உள்ளிட்ட பல வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

அப்படி ரவி மோகன் அளித்த பேட்டியொன்றில் தன் மகன்கள், என்னை எதுக்குத்தான் கலாய்க்கல, ஆங்கிலத்தில் ஏதாவது ஒரு வார்த்தை தப்பா பேசினாலோ, அரைநாள் ஊருக்கே சொல்லி என்னை அசிங்கப்படுத்துவாங்க. ஃபுட்பாலில் பாலை காலுக்கு அடியில் அடித்தாலே, தப்பா அடித்தாலோ, என்னை அசிங்கப்படுத்துவானுங்க என்று காமெடியாக தெரிவித்துள்ளார் ரவி மோகன்.