கெனிஷாவுடன் இலங்கை சென்றுள்ள நடிகர் ரவி மோகன்.. ஏன்? புதிய பிளான்!

Tamil Cinema Kenishaa Francis Ravi Mohan
By Bhavya Jul 21, 2025 07:30 AM GMT
Report

ரவி மோகன்

தமிழ் சினிமாவில் படங்கள் நடிப்பது, வாழ்க்கையை கவனிப்பது என இருந்தவர் நடிகர் ரவி மோகன். ஆனால் கடந்த சில வருடங்களாக ரவி மோகன் பற்றி ஏதாவது ஒரு கிசுகிசு செய்தி வந்துகொண்டே இருக்கிறது.

அப்படி கடந்த வருடம் அவர் விவாகரத்து செய்தி வெளியாக பல சர்ச்சைகள் எழுந்தது. தற்போது, சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் 'பராசக்தி' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும், ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

கெனிஷாவுடன் இலங்கை சென்றுள்ள நடிகர் ரவி மோகன்.. ஏன்? புதிய பிளான்! | Ravi Mohan Went To Sri Lanka Photos Goes Viral

புதிய பிளான்!

இந்நிலையில், தற்போது பல சர்ச்சைகளுக்கு மத்தியில் பாடகியான கெனிஷா பிரான்சைஸ் உடன் ரவி மோகன் இலங்கைக்கு சென்றுள்ளார்.

அங்கு இருவரும் இலங்கை வெளியுறவுத் துறை விஜித் ஹெராத்தை சந்தித்து பேசியுள்ளனர்.

இந்த சந்திப்பு இலங்கையில் இசைக் கச்சேரி நடத்துவது தொடர்பாக நடைபெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. சர்ச்சைகளுக்கு மத்தியில் இருவரும் ஒன்றாக இலங்கைக்கு சென்றது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

கெனிஷாவுடன் இலங்கை சென்றுள்ள நடிகர் ரவி மோகன்.. ஏன்? புதிய பிளான்! | Ravi Mohan Went To Sri Lanka Photos Goes Viral