இதயத்தில் ஏதோ ஒன்று!! விவாகரத்து கேட்டப்பின் ஆர்த்தி ரவியின் நியூ லுக் புகைப்படங்கள்..

Viral Photos Divorce Aarti Ravi Ravi Mohan
By Edward Jul 08, 2025 07:30 PM GMT
Report

ஆர்த்தி ரவி

நடிகர் ரவி மோகன், ஆர்த்தி என்பவரை கடந்த 2009ல் திருமணம் செய்து இரு ஆண் மகனுக்கு தந்தையாகினார். இதனையடுத்து தன் மனைவியுடன் பல இடங்களுக்கு சென்று பெருமையாக பேசி வந்த ரவி மோகன் கடந்த ஆண்டு, ஆர்த்தியை விவாகரத்து செய்யவுள்ளதாக கூறி அறிக்கை வெளியிட்டார்.

இதற்கு தான் உடன்படவில்லை என்றும் அதனுடைய கருத்துக்களை இணையத்தில் அறிக்கையாக ஆர்த்தி வெளியிட்டார். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர சமரசம் பேசப்பட்டு, ஆர்த்தி ஜீவனாம்சமும் கேட்டிருந்தார்.

இதயத்தில் ஏதோ ஒன்று!! விவாகரத்து கேட்டப்பின் ஆர்த்தி ரவியின் நியூ லுக் புகைப்படங்கள்.. | Ravi Mohan Wife Aarti Ravi Recent Photo With Sons

இன்னும் விவாகரத்து வழங்கப்படாத நிலையில், ரவி மோகன், பெண் தோழி கெனிஷாவுடன் பல இடங்களுக்கு சென்று சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனைதொடர்ந்து ஆர்த்தி மறைமுகமாக இணையத்தில் சில கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.

புகைப்படங்கள்

இந்நிலையில், சேலையுடன் தன் மகன்களுடன் நேரத்தை செலவிட்டபோது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.