எனக்கும் மகாலட்சுமிக்கும் விவாகரத்தா.. உண்மை தான்..ஜாமினில் வெளிவந்த ரவீந்தர் கண்கலங்கி பேட்டி
Tamil Cinema
Serials
Ravindar Chandrasekaran
Mahalakshmi
Tamil TV Serials
By Dhiviyarajan
சீரியல் நடிகை மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பல விமர்சனங்களை சந்தித்து வந்த இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தும் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தியும் வந்திருக்கிறார்.
சமீபத்தில் ரவீந்தரை பணமோசடி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது இவர் ஜாமினில் விடுதலை ஆகி உள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ரவீந்தர் மகாலட்சுமியை விவாகரத்து செய்யப்போகிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ரவீந்தர், என்னுடைய அம்மாவுக்கு பிறகு மகாலட்சுமி எனக்கு கிடைத்த வரம். என்னிடம் இருந்து மகாலட்சுமியை பிரிக்க முடியாது. ஹேட்டர்கள் எங்களை குறித்து தவறான பொய்யான வதந்திகளை பரப்பட்டும் என்று கண்ணீர் சிந்தி பேசியுள்ளார் ரவீந்தர்.
You May Like This Video