ராதா சொத்து ரூ. 5 ஆயிரம் கோடி இருக்கும்!! உண்மையை கூறினால்!! அம்பிகா அதிரடி பேச்சு..

Ambika Radha Gossip Today
By Jai Sep 23, 2026 08:00 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகளாக ராதா மற்றும் அம்பிகா இருவரும் திகழ்ந்து வந்தனர். சில நாட்களுக்கு முன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ராதா தன்னுடைய சகோதரி அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா மீது மோசடி புகாரளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து ராதா பத்திரிக்கையாளர்களிடம், அக்கா இப்படி செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கவே இல்லை என்று கூறியிருந்தார்.

ராதா சொத்து ரூ. 5 ஆயிரம் கோடி இருக்கும்!! உண்மையை கூறினால்!! அம்பிகா அதிரடி பேச்சு.. | Ambika Says If I Tell The Truth Radha Metworth

அம்பிகா

இந்நிலையில், அம்பிகா பத்திரிக்கையாளர்களை சந்தித்து ராதா அளித்த ரூ. 46 கோடி மோசடி முயற்சி புகார் தொடர்பாக உண்மைகளை உடைத்து பேசியுள்ளார். அதில், ராதா தான் எனக்கு காசோலைகளை வழங்கினார். எனக்கு காசோலைகளை கொடுத்துவிட்டு வங்கியில் நிறுத்தியதும் ராதா தான். போரூர் ஏ ஆர் எஸ் கார்டன் யாருக்கு சொந்தம் என்பதில் தான் பிரச்சனை.

போரூர் ARS கார்டன் உருவாக நான் தான் முக்கிய காரணம். ஏ ஆர் எஸ் கார்டனில் என்னுடைய சொத்தில் இருந்து என் பெயரை நீக்கிவிட்டனர். என் பெயரிலுள்ள தங்க நகைகளையும் ராதா வைத்துள்ளார். என் தங்கம் நிறைய என்னுடைய சகோதரி ராதாவிடம் உள்ளது. தங்கம் என்றால் என் சகோதரி ராதாவுக்கு வீக்னெஸ் உண்டு.

ராதா சொத்து ரூ. 5 ஆயிரம் கோடி இருக்கும்!! உண்மையை கூறினால்!! அம்பிகா அதிரடி பேச்சு.. | Ambika Says If I Tell The Truth Radha Metworth

5 ஆயிரம் கோடி

கையெழுத்து போட்டுவிட்டு காசோலையை என்னுடைய வீட்டில் ஏன் ராதா வைக்க வேண்டும். என் வீட்டிலுள்ள காசோலையை நான் எப்படி திருட முடியும்? காசோலை கொடுத்தது ராதா, காசோலையை நிறுத்தியதும் ராதா, பணம் போனது எனக்கு. ராதா கொடுத்த காசோலை பவுன்ஸானதால் நஷ்டம் எனக்கு தான்.

நான் உண்மையை கூறினால் ராதா சிறைக்கு போக நேரிடும். ராதா மகள் திருமணத்தில் வேலைக்காரிப்போல் இருந்தேன். ராதா கையெழுத்திட்ட காசோலை என் வீட்டிற்கு எப்படி வந்தது? சொத்துக்களை பிரித்த வகையில் ராதா எனக்கு 5 காசோலைகளை வழங்கினார்.

ராதா சொத்து ரூ. 5 ஆயிரம் கோடி இருக்கும்!! உண்மையை கூறினால்!! அம்பிகா அதிரடி பேச்சு.. | Ambika Says If I Tell The Truth Radha Metworth

ராதா தரப்பிடமிருந்து எனக்கு ரூ. 97 கோடி வர வேண்டும். ஏ ஆர் எஸ் கார்டன் பார்ட்னர்ஷி பங்கும் எனக்கு வரவேண்டும். ராதாவி சொத்து மதிப்பு ரூ. 5 ஆயிரம் கோடி வரை இருக்கும். நான் திருடுனேனு சொன்னாங்க பாத்தீங்களா அத மட்டும் என்னால தாங்கவே முடியலைங்க. தயவு செய்து சமூக வலைதளங்கள என்னனு தெரியாம தப்பா பேசாதீங்க.. ஏற்கனவே ராதா என்ன ரொம்ப நோகடிச்சிட்டாங்க என்று அம்பிகா ஓபனாக பேசியுள்ளார்.