தங்கத்தில் கட்டில், பெரிய வீடு.. மகாலட்சுமிக்கு இத்தனை கோடிக்கு கிப்ட் கொடுத்தாரா ரவீந்தர்

Indian Actress
By Parthiban.A Sep 08, 2022 12:30 PM GMT
Report

கடந்த ஒரு வாரமாக மஹாலக்ஷ்மி - ரவீந்தர் திருமணம் பற்றி தான் ஒட்டுமொத்த இணையமும் பேசிக்கொண்டிருந்தது. அவர்கள் எப்படி காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள், பணத்திற்காக நடிகை அந்த தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டாரா என பல விதமான கேள்விகள் வந்துகொண்டிருக்கிறது.

அந்த ட்ரோல்களுக்கு எல்லாம் ரவீந்தர் - மஹா இருவரும் பேட்டியில் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருமணம் நடந்திருக்கும் நிலையில் ரவீந்தர் பல விலையுயயர்ந்த பொருட்களை கிப்ட் ஆக மகாலட்சுமிக்கு கொடுத்து இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

அதிலும் அவர் தங்கத்தில் கட்டில் வாங்கி கொடுத்திருக்கிறார் என்கிற செய்தி எல்லாம் அதிகம் பேசப்பட்டு வருகிறது. 75 லட்சத்திற்கு ஒரு பெரிய வீடு, 300 பட்டு புடவைகள், ஏராளமான நகைகள் ஆகியவற்றை ரவீந்தர் மகாலட்சுமிக்கு கிப்ட் ஆக கொடுத்திருக்கிறாராம்.

 தங்கத்தில் கட்டில், பெரிய வீடு.. மகாலட்சுமிக்கு இத்தனை கோடிக்கு கிப்ட் கொடுத்தாரா ரவீந்தர் | Ravindar Gift For Actress Mahalakshmi Worth Crores