சுச்சி லீக்ஸை விட பிக்பாஸ் அனிதா லீக்ஸ் வேறலெவல்! லீக்கான தயாரிப்பாளரின் ஆடியோ..

aari biggbosstamil4 anithasampath ravindran balajimurugadass
By Edward Jun 05, 2021 01:56 PM GMT
Report

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின் ஒருசில படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்தும் பிரபலமானவர் அனிதா சம்பத். சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டு 80 நாட்களுக்கு மேல் இருந்தார். இதையடுத்து பல சர்ச்சையிலும் விமர்சனத்திலும் சிக்கிய அனிதா சம்பத் தற்போது பரபரப்பான ஆடியோ வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன் வாங்கிய விருதை திருப்பி கொடுத்தபின், பிக்பாஸ் பாலாஜி பதிவிட்ட பதிவிற்கு ஆதரவு தெரிவித்து விளக்கமாக பேசியிருந்தார் அனிதா. சில போட்டியாளர்கள் மற்றவர்களை இழிவாக பேட்டியில் கூறி வருகிறார்கள் என்றும், சிலர் அமைதியாக இருக்கிறார்கள் என்றும் கூறியிருந்தார். காசுக்காக 20ஆயிரம் 30 ஆயிரம் வாங்கி பலரை இழிவாக பேசி வருகிறார்கள். இது விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்றும் கூறியிருந்தார் அனிதா.

இதையடுத்து, தயாரிப்பாளர் ரவீந்தரன், அனிதா நீ சிம்ப்ளி வேஸ்ட், தவறான செய்தியை எப்போதுமே சொல்லக்கூடாது. சுரேஷ் மற்றும் வேல்முருகன் பணத்தை வாங்கிக் கொண்டு மற்றவர்களை தவறாக பேசியதாக நீங்கள் தவறான மற்றவர்களை சொல்லக்கூடாது. இதுபோல ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை சொல்வது கேவலமாக இருக்கிறது.மேலும் நீங்கள் 85 நாள் பிக் பாஸ் வீட்டில் இருந்தேன் என்று பெருமையாக சொன்னீர்கள்.

ஆனால், உண்மையில் நீங்கள் இருந்த போது உங்களை விட மற்றவர்களை வெளியில் அனுப்ப மக்கள் கொஞ்சம் பிஸியாக இருந்துள்ளார்கள் என்று பதிலடி கொடுத்து பேசியுள்ளார். இப்படி ஒரு நிலையில் அனிதா சம்பத் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த பின்னர் ரவீந்தரனுடன் போனில் ஆரியின் வெற்றி பற்றி பேசிய ஆடியோக்களை ஆரியின் செய்து வெளியிட்டுள்ளார். இது தற்போது சுச்சி லீக்ஸை விட பெரியளவில் வைரலாகி அனிதா லீக்ஸ் ஆரம்பம் என்று நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகிறார்கள்.