ரவீந்தர் மனைவி நடிகை மகாலட்சுமியா இது!! புகைப்படத்தை பார்த்து மெய்மறக்கும் ரசிகர்கள்..
சின்னத்திரை சீரியல் நடிகையாக திகழ்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருபவர் நடிகை மகாலட்சுமி சங்கர். சில ஆண்டுகளுக்கு முன் முதல் கணவரை விவாகரத்து செய்து மகனுடன் தனியாக வாழ்ந்து வந்தார்.
அதன்பின் சீரியல் நடித்து வந்த மகாலட்சுமி ஏற்கனவே திருமணமான நடிகர் ஈஸ்வருடன் நெருக்கமாக இருந்து சர்ச்சையில் சிக்கினார். முதல் மனைவி கொடுத்த புகாருக்கு பின் அவரைவிட்டு விலகினார்.
கடந்த ஆண்டு தயாரிப்பாளரும் ஃபேட் மேன் என்று கூறப்படும் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரின் திருமணத்தை பலர் கேலி செய்ததை எல்லாம் கண்டுக்கொள்ளாமல் சிறப்பாக வாழ்ந்து வந்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் வருட திருமண நாள் கொண்டாடிய அடுத்த சில நாட்களில் பணமோசடியால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார்.
ஒரு மாதம் கழித்து வெளியில் வந்த ரவீந்தர் தன் மனைவி தனக்கு எப்படி சப்போர்ட் செய்கிறார் என்பதை எமோஷ்னலாக பகிர்ந்து தற்போது பிக்பாஸ் விமர்சனம் செய்து வருகிறார்.
மகாலட்சுமியும் சீரியலில் நடித்து போட்டோஷூட் எடுத்து புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். தற்போது நகை விளம்பரத்திற்காக அழகிய போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் புகைப்படத்தை பார்த்து மெய்மறந்து கருத்துக்களால் வர்ணித்து வருகிறார்கள்.