மகாலட்சுமியை விட 21 வயது மூத்தவரா இரண்டாம் கணவர்.. திருமண விசயத்தில் உண்மையை உடைத்த ரவிந்தர்
சமுகவலைத்தளங்களில் சமீபகாலமாக பெரியளவில் எங்கு போனாலும் பேசப்பட்டு வரும் செய்தி மகாலட்சுமி ரவிந்தர் திருமணம் தான். சீரியல் நடிகையாக இருந்து ஏற்கனவே ஒருவருடன் திருமணம் செய்து மகன் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தவர் மகாலட்சுமி.
அதேபோல் ரவிந்தரும் சினிமாத்துறையில் தயாரிப்பாளராக இருந்து ஏற்கனவே திருமணம் செய்தவர் என்றும் கூறப்படுகிறது. அதைவிட இருவரும் திருமணமும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்த நிலையில் இதற்கான பதிலை பேட்டிக்கொடுத்து விளக்கம் அளித்து வருகிறார்கள் காதல் தம்பதிகள்.
அந்தவகையில் ரவிந்தர், மகாலட்சுமியைவிட 21 வயது மூத்தவர் என்றும் 54-35 வயதுன்னு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியும் வருகிறது. இதற்கு ரவிந்தர், நான் என்ன பள்ளி படிக்கும் பொண்ணையா தூக்கிட்டு வந்து கல்யாணம் செய்தேன்.
எனக்கு தற்போது 38 வயது தான் ஆகிறது. மகாலட்சுமிக்கு 35 வயதும் ஆகிறது. அப்படியிருக்கையில் எப்படி சின்ன பொண்ண தூக்கிட்டு கல்யாணம் பண்ணமாதிரி பேசுறீங்க என்று கூறியுள்ளார்.