நடிகை ராதிகாவின் அம்மா மரணம்.. மகள் ரயான் வெளியிட்ட பதிவு! யாரை தாக்கியுள்ளார்?
நடிகர் எம்.ஆர். ராதாவின் மனைவியின் நடிகைகள் ராதிகா மற்றும் நிரோஷாவின் தாய்யுமான கீதா ராதா கடந்த ஞாயிற்று கிழமை இரவு உடல்நல குறைவு காரணமாக காலமானார்.
அவருடைய இறுதி சடங்குகள் நேற்று நடந்த முடிந்தது. திரையுலக பிரபலங்கள், தமிழக முதல்வர் என பலரும் தங்களது இறுதி அஞ்சலியை ராதிகாவின் அம்மாவுக்கு செலுத்தினார்கள்.
இந்த நிலையில், ராதிகாவின் மகள் ரயான் மிதுன் பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவில், "திருமணம் கொண்டாட்டம் போன்ற விஷயங்களில் கலந்துகொள்ளவில்லை என்றாலும், நிச்சயம் இறுதி அஞ்சலியில் கலந்துகொள்ள வேண்டும் என எனது தந்தை சொல்வார். பழைய பகை எதுவாக இருந்தாலும், அதை ஒதுக்கி வைத்துவிட்டு போய் மரியாதையை செலுத்து என அவர் கூறுவார்" என அவர் பதிவிட்டுள்ளார்.
ரயான் மிதுன் திடீரென இப்படியொரு பதிவை வெளியிடவும், இதை யாருக்காக அவர் வெளியிட்டுள்ளார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.