சினிமாவில் மார்க்கெட் இல்லாத நடிகைகளை டார்கெட் செய்யும் கமல்!.. இத்தனை நடிகைகளுக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறாரா?
தமிழ் சினிமா பிரபலமாக முக்கிய பங்கு வகித்தவர் தான் உலக நாயகன் கமல் ஹாசன். இவர் படத்தில் நடித்த பல நடிகைகள் பிரபலமாகியுள்ளனர்.
திரிஷா பல படங்களில் நடித்திருந்தாலும் குறிப்பிட்ட காலகட்டத்தில் அவருக்கு பட வாய்ப்பு குறைந்தது. அந்த நேரத்தில் கமல் ஹாசனின் மன்மதன் அம்பு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படத்திற்கு பிறகு திரிஷாவிற்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
பிரபல பாடகி மற்றும் நடிகை என பன்முகங்களை கொண்டவர் ஆண்ட்ரியா. இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பெருசாக யாருக்கும் தெரியாத அளவிற்கு இருந்தார். அப்போது இவர் கமல் ஹாசன் இயக்கி நடித்த விஸ்வரூபம் படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருப்பார். இப்படத்தை தொடர்ந்து பல பிரபல இயக்குனர்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
90 காலகட்டத்தில் பிரபலமாக இருந்தவர்கள் தான் ரம்யா கிருஷ்ணன், சிம்ரன். இவர்களுக்கு பட இல்லாமல் இருந்த போது கமலின் பஞ்சதந்திரம் படத்தில் நடித்து துவண்டு இருந்த சினிமா மார்க்கெட்டை தூக்கி விட்டார்.