12 ஆண்டுகளுக்கு முன் ஆணவத்தில் செய்த வேலை!! விஜயகாந்த் வடிவேலுக்கு பிரச்சனை வர இதான் காரணம்..

Vijayakanth Vadivelu Gossip Today
By Edward Mar 23, 2023 04:41 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகாந்த் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு தூக்கிடப்பட்டவர் வைகைப்புயல் வடிவேலு. அறிமுகப்படுத்தியத்தோடு தன்னுடனே இருக்கவும் வைத்து இருக்கிறார் விஜயகாந்த். ஆனால் அண்ணன், அண்ணன் என்று கூறி வந்த வடிவேலு ஏன் விஜயகாந்தை பகைத்துக்கொண்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலுக்காக திமுக சார்பில் விஜயகாந்தை எதிர்த்து வடிவேலு பேசியிருந்தார். அதுவும் ஒரு காரணமாக இருக்க உண்மையான சம்பவம் ஒன்றினை மீசை ராஜேந்திரன் கூறியிருக்கிறார்.

வடிவேலுவின் ஆபிஸ்க்கு அருகில் தான் விஜயகாந்த் அவர்களின் அக்கா வீடு இருக்கிறது. அக்காவின் கணவர் இறந்ததால் அவருக்கு அஞ்சலி செலுத்த விஜயகாந்த் சென்றிருக்கிறார்.

அப்போது அஞ்சலிக்கு வந்தவர்கள் வடிவேலுவின் அலுவலகத்திற்கு முன்னால் வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றுள்ளனர். இதனை பார்த்த வடிவேலு, சாவு வீட்டில் துக்கம் விசாரிக்க வந்தவர்களுடன் சண்டைப்போட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த விஜயகாந்த் கடுமையாக மறைமுகமாக தாக்கி இருப்பதாக கூறியிருக்கிறார் மீசை ராஜேந்திரன். இது குறித்து பல பிரபலங்கள் வடிவேலுவின் ஆணவ செயலை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார்கள்.