இரு நடிகைகளுடன் நெருக்கம்! நடிகை சமந்தாவை சைதன்யா பிரிய உண்மையான காரணம் இதுதானா?
இந்திய சினிமாவில் ஜோடி நட்சத்திரங்கள் பலர் இருப்பதை போன்று க்யூட் ஜோடி என்ற பெயரை பெற்று வந்தவர்கள் சமந்தா - நாக சைதன்யா. 7 ஆண்டுகள் காதல் 4 ஆண்டுகள் திருமணம் என வாழ்ந்து வந்த ஒருவரும் சில மாதங்களாக இருவருக்கும் சில கருத்து வேறுபாடுகள் என்று வெளியான வதந்திகள் பரவிய நிலையில், கடந்த வாரம் இருவரும் அதிகாரப்பூர்வமான விவாகரத்து செய்தியை அறிவித்தனர். இருவரின் அறிக்கையும் பார்க்க ஒரே மாதிரி இருக்க அதிலும் சில சர்ச்சையை ஏற்படுத்தியது.
சமந்தா - நாக சைதன்யா விவாகரத்துக்கு சம்ந்தாவின் நடவடிக்கையும் படங்களில் படுமோசமான காட்சிகளில் நடித்தும் தான் காரணம் என்று கூறி வந்தனர். மேலும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை வேறொருவருடன் தொடர்பு, கருக்கலைப்பு என்று சமந்தாவின் மேல் தான் குற்றங்கள் விழுந்து வந்தன. குழந்தை பெற்றுக்கொள்ள நாக சைதன்யாவின் குடும்பம் அவரை வற்புறுத்தியதாகவும் நடிப்பதை ஏற்காமலும் இருந்து வந்துள்ளார்களாம் நாகர்ஜுனாவின் குடும்பத்தினர்.
இதனால் குடும்பத்தினர் மீது சமந்தா கோபமடைந்து விழாக்கல் பார்ட்டிகள் என எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்துள்ளார்கள். இதையடுத்து அவர்களின் விவாகரத்துக்கு சமந்தா ஆடை வடிவமைப்பாளர் ஒருவருடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளது பிடிக்கவில்லையாம். இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா மீதும் சில காரணங்கள் இருந்து சமந்தா விவாகரத்து கேட்டுள்ளதாகவும் சில செய்திகள் வெளியாகியுள்ளது.
இரு அக்கட தேசத்து நடிகைகளுடன் நெருக்கமாக இருந்துள்ளதாகவும், அவர்களுடன் பேசக்கூடாது என கூறியும் அவர் அதை ஏற்க மறுத்து நாக சைதன்யா அந்த நடிகைகளுடன் தொடர் நெருக்கம் காட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் சமந்தா தென்னிந்திய மொழிகளில் பிஸி நடிகையாக இருந்து தன்னைவிட அதிக சம்பளம் வாங்கி வருவதாகவும் என்ற பொறாமையில் இருந்துள்ளாராம். இதன்மூலம் குடும்பத்திற்குள் வந்த சில பிரச்சனைகளே விவாகரத்துக்கு காரணமாக அமைந்தது எனவும் கூறப்படுகிறது.