டாக் பேக்கில் அசிங்கப்படுத்திய பிக்பாஸ்! கமல் ஹாசன் விலக இதுதான் காரணமாம்?
பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருபவர் நடிகை கமல்ஹாசன். பிக்பாஸ் 5க்கு பிறகு முதன்முதலாக தமிழில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் ஆரம்பிக்கப்பட்டு அதையும் கமலே தொகுத்து வழங்கி வந்தார்.
இந்நிகழ்ச்சியால் விக்ரம், இந்தியன் 2 போன்ற படங்களின் கால்ஷீட்டும் மற்ற கலைஞர்களின் கால்ஷீட்டும் பாதிக்கப்படுவதாக கூறி பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து விலகி கொண்டார். அடுத்த பிக்பாஸ் 6ல் காண்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கமல் ஹாசன் விலக உண்மையான காரணம் வெளியாகியுள்ளது. நிகழ்ச்சியின் போது நிகழ்ச்சி பொறுப்பாளர்களுக்கும் கமல் ஹாசனுக்கும் சில பிரச்சனை எழுந்ததாலும் அது டாக் பேக் வரை சென்று விவாதமாக மாறியது.
இதனால் கோபத்தில் கமல் கேரவனுக்கு சென்றுள்ளாராம். பின் இனிமேல் இங்கு இருக்க கூடாது என்று அடுத்த நாளே நிகழ்ச்சியை விட்டு விலக முடிவெடுத்துள்ளார். தற்போது கமலுக்கு பதில் சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.