மனைவி சங்கீதாவை விஜய் பிரிய காரணமே இவர்தானா!! சீக்ரெட்டை உடைத்த பிரபலம்..
தமிழக வெற்றிக் கழகம் மாநாடு
நடிகர் விஜய், தன்னுடைய 69வது படத்திற்கு பின் முழு அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் அதன்பின் சினிமாவில் இருந்து விலகுவதாகவும் சமீபத்தில் அறிவித்து தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார்.
அக்கட்சியின் முதல் மாநாடு நேற்று அக்டோபர் 27 ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது. பல லட்சக்கணக்கான மக்கள் சூழ மாநாட்டில் நடிகர் விஜய் பேச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
விஜய்யின் முதல் மாநாட்டுக்கு அவரது பெற்றோர்கள் எஸ் ஏ சந்திரசேகர், ஷோபா இருவரும் முதல் இருக்கையில் அமர்ந்து விஜய் பேச்சை ரசித்தபடி பார்த்திருந்தனர்.
விஜய்யின் தவெக முதல் மாநாட்டிற்கு அவரது மனைவி சங்கீதா பங்கேற்காமல் இருந்தது தற்போது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முரசொலி செல்வத்தின் மரணத்துக்கு சென்ற சங்கீதா, ஏன் தன் கணவரின் முதல் மாநாட்டுக்கு வர முடியவில்லை என்ற கேள்வி எழ ஆரம்பித்திருக்கிறது.
ஜோதிடர்
இந்நிலையில், பத்திரிக்கையாளர் சங்கர் அளித்த பேட்டியொன்றில், விஜய்யும் சங்கீதாவும் நிரந்தரமாக பிரிந்துவிட்டார்களா என்பது தெரியாது. ஆனால், ஜோதிடர் ஒருவர் விஜய்யிடம் நீங்கள் பிரம்மச்சரியம் இருந்தால் ஆட்சியை பிடிக்கலாம் என்று சொன்னதாக சொல்கிறார்கள்.
அந்த கடலூர் ஜோதிடர் விஜய்யின் வாழ்க்கையில் முக்கியமான ரோல் வகித்து வருகிறார். அந்த ஜோதிடர் ஒருவேளை அப்படி சொல்லியிருந்தால் தன் மனைவியை விஜய் பிரிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. சினிமாக்காரர்களின் வாழ்க்கையில் ஜோதிடர்களின் பங்கு முக்கியத்துவமானதாக இருக்கும் என்று சங்கர் தெரிவித்துள்ளார்.