பணத்துக்காக மீண்டும் மேடையில் ஆடுறேன்..100 ரூ யார் கொடுப்பா? பிக்பாஸ் 9 ரம்யா ஜோ..
ரம்யா ஜோ
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 75 நாட்களை தாண்டி ஒளிப்பரப்பாகி வருகிறது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து எவிக்ட்டாகி வெளியேறிய ரம்யா மற்றும் வியானா இருவரும் பல நிகழ்ச்சிகளிலும் பேட்டிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகளில் ஆட்டம் போட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ரம்யா ஜோ, தற்போது மீண்டும் ஆடலும் பாடலும் நிகழ்ச்சியை ஆரம்பித்திருக்கிறார்.
100 ரூபாய் யார் கொடுப்பா?
இதுகுறித்து பலரும் விமர்சித்து வந்த நிலையில், ரம்யா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் விளக்கமளித்துள்ளார். அதில், பிக்பாஸ் போய்ட்டு வந்ததும் மேடையில் ஆடுறேன்னு சொல்றீங்களே, எனக்கு செலவுக்கு 100 ரூபாய் யார் கொடுப்பா? என் பிரச்சனை எனக்கு தான் தெரியும்.

எனக்குன்னு வாடகை, EMI இருக்கிறது யாருக்காவது தெரியுமா? எனக்கு செலவுக்கு காசு வேணும், அதுனால ஆடுறேன். பிக்பாஸ் முடிய இன்னும் ஒரு மாசமாகும், என் சம்பளம் வர லேட் ஆகும், அதுனால தான் ஆடுறேன் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார் பிக்பாஸ் சீசன் 9 ரம்யா ஜோ.