கர்ப்பணியாக இருக்கும் போது உயிர் விட்ட நடிகை சௌந்தர்யா.. மரணத்திற்கு காரணம் இந்த விஷயம் தானா?

Soundarya
By Dhiviyarajan Mar 26, 2023 12:15 PM GMT
Report

90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சௌந்தர்யா. இவர் தமிழில் அருணாச்சலம், காதலா காதலா, படையப்பா போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

சௌந்தர்யா தமிழ் மொழிகளை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் 2003 -ம் ஆண்டு ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டார். சினிமாவில் பிஸியாக நடித்து வந்த சௌந்தர்யா, அரசியலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

கர்ப்பணியாக இருக்கும் போது உயிர் விட்ட நடிகை சௌந்தர்யா.. மரணத்திற்கு காரணம் இந்த விஷயம் தானா? | Reason For Actress Soundarya Death

விபத்து

2004 -ம் ஆண்டு சௌந்தர்யா தனி விமானத்தில் சென்றுக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. இதில் சௌந்தர்யா, அவரின் சகோதரர், நண்பர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடையவைத்தது.

பல வருடங்களாக  இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வந்த நிலையில் விபத்துக்கான காரணம் என்ன என்பது வெளிவந்துள்ளது.

அதில் விமானத்தை 100 அடிக்கு மேல் பறக்க ஆரம்பிக்கும் போது வழியில் பல பறவைகள் முட்டுக்கட்டையாக பறந்து இருந்திருக்கிறது. அப்போது விமானி பறவைகளை திசைதிருப்ப முயற்சி செய்துள்ளார். அந்த நேரத்தில் தான் விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது, மேலும் இந்த விபத்து நடக்கும் போது சௌந்தர்யா கர்ப்பணியாக இருந்திருக்கிறாராம்.

கர்ப்பணியாக இருக்கும் போது உயிர் விட்ட நடிகை சௌந்தர்யா.. மரணத்திற்கு காரணம் இந்த விஷயம் தானா? | Reason For Actress Soundarya Death