பிளேபாய் நடிகரால் பாதை மாறிப்போன நடிகைகள்.. காணாமல் போன இசை பட நடிகை.
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் அஜித்தின் வாளி, விஜய்யின் குஷி போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து பிரபலமானவர் இயக்குனர் எஸ் ஜே சூர்யா. தற்போது பல படங்களில் வில்லன் மற்றும் கதாநாயகன் ரோலில் நடித்து வருகிறார்.
54 வயதாகும் எஸ் ஜே சூர்யா இன்றுவரை திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் சினிமா விமர்சகர் வித்தகன், எஸ் ஜே சூர்யாவின் பிளே பாய் லீலை மற்றும் அந்தரங்க விசயங்களை பகிர்ந்துள்ளார்.
எஸ் ஜே சூர்யாவுக்கு திருமணமே அகாது என்றும் விளையாட்டுத்தனமான பிளே பாய் நடிகர் என்று கூறியிருக்கிறார். மேலும் தனியாக ஜாலியாக ஊர் சுத்திக்கொண்டிருப்பது போதும். நிம்மதியா தான் இருக்கு என்று நெருக்கமானவர்களிடம் கூறியிருக்கிறாராம் எஸ் ஜே சூர்யா.
மேலும் ஹோம்லி நடிகைகள் கூட அவருடன் நடித்தால் கிசுகிசுக்கப்படுவார்கள். அப்படி நடிகை யாஷிகா, பிரியா பவானி சங்கர் போன்ற நடிகைகளுடன் நடித்து கிசுகிசுவில் சிக்கினார்.
2015 அவர் நடிப்பில் வெளியான இசை படத்தில் நடித்த நடிகை சுலக்னா பனிக்ரஜி என்ற நடிகை தற்போது ஆள் அடையாளம் தெரியாமலே போய்விட்டார். இந்தியில் சில படங்களில் மட்டுமே நடித்தும் வருகிறார்.