ரோபோ ஷங்கருக்கு மீண்டும் உடல்நலம் குன்றிய காரணம் இதுதானா?..
ரோபோ ஷங்கர்
சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரோபோ ஷங்கர். நிறைய ரியாலிட்டி ஷோக்கள் மூலம் தனது திறமையை வெளிக்காட்டியவர் அப்படியே வெள்ளித்திரை பக்கம் வந்தார். மாரி, விஸ்வாசம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என பல படங்களில் காமெடி ரோலில் நடித்து கலக்கினார்.
கடந்த சில வருடங்களாக மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர் கொஞ்சம் உடல்நிலை சரியாகி படங்கள் நடிக்க தொடங்கியிருந்தார். திடிரென மயங்கி விழுந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நேற்று இரவு உயிரிழந்தார். பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.
காரணம் இதுதானா?
ரோபா ஷங்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சினிமாத்துறையை சேர்ந்த பலரும் வீட்டிற்கு சென்று இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோது அவருக்கு என்ன பிரச்சனை என்ற விவரம் எதுவும் வெளியாகாமல் இருந்தது. தற்போது அவருக்கு என்ன ஆனது என்ற விவரம் வெளியாகியுள்ளது. ஒரு படத்தின் ஷூட்டிங்கில் ரோபோ ஷங்கர் கலந்து கொண்ட சமயத்தில் அவர் திடீரென வாந்தி எடுத்து சில நொடிகளில் மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்த போதும் அவரால் இயல்புநிலைக்கு வரமுடியவில்லை. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரோபோ ஷங்கரின் உடல்நிலை மோசமாக இருப்பதாக குறிப்பிட்டு முதலுதவி செய்து, வேறு மருத்துவமனையில் சேர்க்க கூறியதால் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கபட்டு அவர் தற்போது உடல்நிலை சீராக இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.
அதன்பின் மீண்டும் ரோபோ ஷங்கருக்கு உடல்நிலை குன்றியதற்கு காரணம் திரும்பவும் அவர் மது பழக்கத்திற்கு ஆளானது தான் என்று சிலர் கூறினர்.
முதல்முறை உடல்நலம் குன்றியபோது பல பேட்டிகளில் மதுப்பழக்கத்தை குறிப்பிட்டும் அதிலிருந்து மீண்டு வந்து மகளின் திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார் ரோபோ ஷங்கர்.
இந்நிலையில் தான், ரோபோ ஷங்கருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதற்கு சிலர் அவரின் மதுப்பழக்கத்தை குறிப்பிட்டுள்ள நிலையில், அவரின் மகள் இந்திரஜா வெளியிட்டுள்ள பதிவு தற்போது கவனம் ஈர்த்துள்ளது. அதில், நேரம் சரியில்லை என்றால், யார் வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் பேசுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
ரோபோ ஷங்கருக்கு என்ன ஆனது என்று அவரின் குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமான தகவலை கூறவில்லை, ஆனால் சினிமா வட்டாரங்களில் தெரிவித்த தகவல்களே இதுவரை வெளியாகியுள்ளன.