அந்த விஷயத்திற்கு அவரு சரிப்பட்டு வரமாட்டார்.. விஷாலை ஒதுக்கிய தளபதி 67 தயாரிப்பாளர்

Vijay Vishal
By Dhiviyarajan Feb 03, 2023 05:15 PM GMT
Report

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் தயாராகும் திரைப்படம் தான் லியோ. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் த்ரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜூன், பிரியா ஆனந்த், மேத்யூ போன்ற பலரும் நடிக்கவுள்ளனர். தற்போது லியோ படத்தின் ப்ரோமோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விஷால் வேண்டாம்

சில மாதங்களுக்கு முன்பு லியோ படத்தில் விஷால் விஜய்க்கு வில்லனாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்ததாகவும், அவரும் இதற்கு ஒப்புக்கொண்டதாக தகவல் ஒன்று வெளியானது.

ஆனால் விஷால் சில காரணங்களால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது, அதற்கு காரணம் விஷால் நடித்த எந்த படங்களுக்கும் படப்பிடிப்புக்கு சரியாக போவது இல்லையாம்.

இதேபோல் விஜய்யின் லியோ படத்திற்கு நடந்துவிடக்கூடாது என்பதற்காக விஷால் இப்படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறியுள்ளாராம் படத்தின் தயாரிப்பாளர் லலித். இதனால் தான் விஷால் இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தார் என்று மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.