நம்ப வைத்து ஏமாற்றிய இயக்குனர்! காஜல் அகர்வாலுக்கு கிடைத்த மிகப்பெரிய அவமானம்..

Kajal Aggarwal Chiranjeevi Acharya Ram Charan
By Edward Apr 26, 2022 01:31 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து தென்னிந்திய படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்த நடிகை காஜல் அகர்வால். பழனி படத்தில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் கோடியில் சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்த்தியது.

முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வந்த காஜல் சில வருடங்களுக்கு முன் கெளதம் கிச்சுலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கமிட்டாகிய படங்களில் நடித்து ஒருசில படங்களில் விலகியும் வந்தார்.

அப்படி கோவிட் 19க்கு முன்பே ஆரம்பித்த படம் ஆச்சாரியா. மெகாஸ்டார் சிரஞ்சீவி, நடிகர் ராம் சரண், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவான படமான ஆச்சார்யாவில் நடித்திருந்தார் காஜல் அகர்வால்.

திருமணத்திற்கு பிறகு கர்ப்பமானதால் அப்படத்தில் ஒருசில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தார். இதனால் டிரைலரில் கூட அவரின் காட்சிகள் அமையவில்லை. இதற்கு பதில் கூறிய இயக்குனர் கொரட்டலா சிவா, படத்தில் காஜல் அகர்வாலின் ரோல் முக்கியத்துவமாக இல்லை.

அதனால் அவரது காட்சிகள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. சிரஞ்சீவியின் ஜோடியாக சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டது. அதன் காரணமாக தான் நான் அவரது காட்சிகளை எடுத்துவிட்டேன்.

இதுகுறித்து காஜல் அகர்வாலிடம் தெரிவித்துவிட்டு தான் அதை செய்தோம் என்று கூறியுள்ளார். கதைக்கு தேவை இல்லை என்று இப்போது கூறும் இயக்குனர் அப்போ ஏன் காஜலை கமிட் செய்தார் என்று ரசிகர்கள் அவரை கேள்வி கேட்டு வருகிறார்கள்.