பிகில் பட சிங்கப்பெண்-ஆ இது!! பட விழாவில் சேலையில் மயக்கும் நடிகை ரெபா மோனிகா..

Reba Monica John Tamil Actress Actress
By Edward Mar 28, 2025 06:30 AM GMT
Report

ரெபா மோனிகா ஜான்

மலையாள சினிமாவில் முக்கிய ரோலில் நடித்து வந்தவர் நடிகை ரெபா மோனிகா ஜான். தமிழில் ஜருகண்டி என்ற படத்தில் ஜெய்யுடன் ஜோடியாக நடித்து அறிமுகமாகினார். அதன்பின் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தார்.

பிகில் பட சிங்கப்பெண்-ஆ இது!! பட விழாவில் சேலையில் மயக்கும் நடிகை ரெபா மோனிகா.. | Reba Monica John Dances To Swathireddy Song

பிகில் படத்தில் சிங்கப்பெண்ணாக நடித்து பிரபலமான ரெபா மோனிகா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் நடித்து வருகிறார். கிளாமர் லுக்கில் நடித்தும் போட்டோஷூட் எடுத்தும் வந்த ரெபா மோனிகா கடந்த 2022ல் ஜோமன் ஜோசப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்பும் படங்களில் நடித்து வரும் ரெபா மோனிகா ஜான் தற்போது, ரஜினிகாந்தின் கூலி படத்திலும், சகலகலா வல்லபா என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். மேலும் விஜய்யின் ஜனநாயகன் படத்திலும் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

Mad Square

தற்போது Mad Square என்ற தெலுங்கு படத்தில் Swathi Reddy என்ற ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இப்படத்தின் விழாவில் கலந்து கொண்ட ரெபா மோனிகா, நீல நிற சேலையில் கிளாமர் காட்டியபடி வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். மேடையில் சக நடிகர்கலுடன் அந்த பாடலுக்கு ஆட்டமும் போட்டு வியக்க வைத்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery