தாலியில் இரண்டு டாலர் போட்டுக்கொண்ட ரெடின் கிங்ஸ்லி மனைவி!! திருமணத்தில் இப்படியொரு ரகசியமா..
தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா, அண்ணாத்த, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் காமெடி நடிகராக நடித்து பிரபலமானவர் நடிகை ரெடின் கிங்ஸ்லி. சில தினங்களுக்கு முன் சீரியல் நடிகையும் மாஸ்டர் படத்தில் விஜய்யின் தோழியாகவும் நடித்த நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார்.
மைசூரில் சாதரணமாக நடைபெற்ற இத்திருமணத்தின் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. திருமணமாகி ஒரு வாரத்தில் மனைவி சங்கீதாவுடன் ஹனிமூன் டூர் சென்றிருக்கிறார் ரெடின் கிங்ஸ்லி. அங்கு எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.
இந்நிலையில் சங்கீதாவுக்கு மேக்கப் போட்டு வந்த பெண் அளித்த பேட்டியொன்றில், இருவரும் பிளான் செய்து திருமணத்தை செய்யவில்லை. சாருக்கு மைசூரில் ஷூட்டிங் நடந்ததால் இடைவெளியில் நடத்த பிளான் போட்டார்கள்.
அதுவும் திருமணத்தின் போது தான் சார் வந்ததை பார்த்தோம். திருமணம் முடிந்த போது தான் நாங்கள் சென்றோம். சங்கீதாவின் தாலியில் இரு டாலர் இருந்தது.
ரெடின் கிங்ஸ்லி கிறிஸ்டியன் என்பதால் அந்த டாலரும், இந்து என்கிற டாலரும் இருந்தது. இரு முறைப்படி திருமணம் நடைபெற்றதாகவும் இந்து கோவிலுக்கு சென்று பின் செர்ஜ்-க்கு சென்றதாகவும் தெரிவித்திருந்தார்.