Zombie-ய நடிக்க வை தல? நெல்சனை கடுப்பேற்றிய ரெடின் கிங்ஸ்லி?
தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் நெல்சன் திலீப்குமார். கடந்த 2010ல் சிம்பு, ஹன்சிகாவைத்து வேட்டை மன்னன் என்ற படத்தினை இயக்கி வந்த நெல்சன் சில காரணங்கள் இப்படம் நின்று போனது.
அதன்பின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன் தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தினை இயக்கினார். அப்படம் ஓரளவிற்கு ஓடினாலும் பெரிய ஹிட் கொடுக்கவில்லை. அந்த சமயத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தினை இயக்கி 100 வசூலை அள்ளினார்.
இப்படம் வெளியாவதற்கு முன்பே நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தினை இயக்க கமிட்டாகினார். இதன்பின் நெல்சன் தலைவர் 169 படத்தின் இயக்குனராக உருவெடுத்துள்ளார். மூன்று முன்னணி ஸ்டார் நடிகர்களை வைத்து இயக்கி வரும் நெல்சன் குறிப்பாக தன் கூட்டணியில் நடித்த நடிகர்களை வைத்து தான் படத்தினை எடுத்து வருகிறார்.
டாக்டர் படத்தில் இருந்து முக்கால் வாசி கலைஞர்களை பீஸ்ட் படத்திலும் நடிக்க வைத்துள்ளார் நெல்சன். அப்படி மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. தன்னுடைய தனித்திறமையான பேச்சால் மக்கள் மனதில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார் ரெடின்.
அந்தவகையில் படத்தில் நடித்த சுனில் ரெட்டியும் சிவா அரவிந்தும் சமீபத்தில் பேட்டியொன்றில் டாக்டர் படத்தினை பற்றி பேசியுள்ளனர். அதில் ரெடின் கிங்ஸ்லி படப்பிடிப்பில் நடந்து கொண்ட விஷயத்தினை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
கடுப்பேற்றி நெல்சனிடம் சில காமெடி விஷயங்களை கூறுவாராம் ரெடின் கிங்ஸ்லி. அதை கேட்டு நெல்சன் சீரியஷாக எடுத்துக்கொள்ளாமல் காமெடியாக எடுத்து சிரித்துவிடுவாராம்.
வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்..