46 வயதில் விஜய் பட நடிகையை திருமணம் செய்த ரெடின் கிங்ஸ்லி.. குவியும் வாழ்த்துக்கள்
கடந்த 2018 -ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலம் ஆனவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. அவர் பேசும் விதத்திற்கே பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ரெடின் அதற்கு பிறகு நெல்சனின் டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் சமீபத்தில் வந்த ஜெயிலர் படத்திலும் அவர் நடித்து இருந்தார்.
இந்நிலையில் மாஸ்டர் படத்தில் விஜய்யின் தோழியாக நடித்த நடிகை சங்கீதாவை இன்று ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்து உள்ளார். இந்த விஷயத்தை நடிகர் சதிஷ் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு, திருமண வாழ்த்துக்கள். இந்த புகைப்படம் ஷூட்டிங் செட்டில் இருந்து எடுக்கவில்லை. உண்மையில் இவர்களுக்கு திருமணம் தான் என்று பதிவிட்டுள்ளார்.
இதோ புகைப்படம்.
Happy married life @kingsely_redin . Wishing blockbuster life ahead . And this is for real not from any film sets . pic.twitter.com/P9dMgU2RSr
— Sathish krishnan (@dancersatz) December 10, 2023