கிங்ஸ்லி அந்த விஷயத்தில் வீக்.. இது தெரிஞ்சா கல்யாணமே பண்ணியிருக்க மாட்டேன்!! என்ன இப்படி சொல்லிட்டாங்க..

Tamil Cinema Actors Tamil Actors Redin Kingsley
By Dhiviyarajan Apr 22, 2024 05:32 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

கடந்த 2018 -ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலம் ஆனவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி.

இவர் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

கிங்ஸ்லி அந்த விஷயத்தில் வீக்.. இது தெரிஞ்சா கல்யாணமே பண்ணியிருக்க மாட்டேன்!! என்ன இப்படி சொல்லிட்டாங்க.. | Redin Kingsley Weak In Romance

இந்நிலையில் விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட. சிறந்த காமெடி நடிகருக்கான விருதை ரெடின் கிங்ஸ்லி பெற்றார். அந்த சமயத்தில் விழா ஏற்பாட்டாளர்கள் மேடையிலேயே நடிகை சங்கீதாவுக்கும் ரெடின் கிங்ஸ்லிக்கும் மீண்டும் திருமணம் நடத்தி பார்க்க ஆசைப்பட்டு மாலையை மாற்ற சொன்னார்கள்.

இதை எதிர்பாராத ரெடின், இப்படி பண்ணுவீங்கனு தெரிந்தா கல்யாணம் பண்ணாமல் இருந்து இருப்பேன். திருமண செலவு மிச்சம் என கூறினார். மேலும் அவர் பேசுகையில், எனக்கு ரொமான்ஸ் பண்ண தெரியாது. இப்போ தான் மனைவி சங்கீதா சொல்லிதாரங்க என்று ரெடின் தெரிவித்துள்ளார்.