மனைவி, குழந்தையுடன் துபாய்க்கு பறந்த ரெடின் கிங்ஸ்லி!! புகைப்படங்கள்..
ரெடின் கிங்ஸ்லி
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் 2018ல் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் காமெடி நடிகராக அறிமுகமாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் ரெடின் கிங்ஸ்லி.

நடன கலைஞராக பல நிகழ்ச்சிகளில் பணியாற்றிய ரெடின், கூர்கா, டாக்டர், அண்ணாத்த, பீஸ்ட், பத்து தல, மார்க் ஆண்டனி, கங்குவா, குட் பேட் அக்லி, தேசிங்கு ராஜா 2, மாஸ்க், ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் ரெடின் கிங்ஸ்லி கடந்த 2023 சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒரு வருடத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெண் குழந்தையை தம்பதியினர் பெற்றெடுத்தனர்.
மனைவி சங்கீதா
சமீபத்தில் மகளின் பிறந்தநாளை கொண்டாடிய ரெடின் கிங்ஸ்லி, தன்னுடைய மனைவி சங்கீதாவின் பிறந்தநாளுக்கு துபாய் சென்றுள்ளார். அங்கு பர்த்டே கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்கள் வாழ்த்துக்களை பெற்றுள்ளார்.