வல்லவன் படத்தில் வருவது போன்று காதல்!! ரீமா சென் வெளிப்படை..

Reema Sen Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 25, 2024 10:05 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த மின்னலே என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை ரீமா சென்.

இதனை அடுத்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். ரீமா சென் கடந்த 2012 -ம் ஆண்டு கரண் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் உள்ளார்.

திருமணத்திற்கு பின் சரியான பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார்.

வல்லவன் படத்தில் வருவது போன்று காதல்!! ரீமா சென் வெளிப்படை.. | Reema Sen Talk About His First Love

இந்நிலையில் ரீமா சென் கொடுத்த பழைய பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், வல்லவன் திரைப்படத்தை போலவே நிகழ்ச்சி ஒன்றில் ஒரு மாணவனை சந்தித்ததாகவும், அவரை ரொம்ப பிடித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அந்த நபரின் தோற்றத்தை தான் இன்றும் மறக்கவில்லை என்றும் ரீமா சென் கூறியுள்ளார்.