மீண்டும் அஜித்துடன் கைகோர்க்கும் 35 வயது நடிகை..? யார் தெரியுமா
இந்த ஆண்டு அஜித் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தன. இதில் குட் பேட் அக்லி படம் எவ்வளவு பெரிய வெற்றியடைந்தது என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது இல்லை.
அஜித்தின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படமாக GBU மாறியுள்ளது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் AK 64 படத்திற்காக இணைகின்றனர்.

இப்படத்தில் ஸ்ரீலீலா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், AK 64 திரைப்படத்தில் நடிக்கப்போகும் மற்றொரு நடிகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தில் முன்னணி நடிகையாக தென்னிந்திய அளவில் வலம் வரும் ரெஜினா கசாண்ட்ரா நடிக்கப்போவதாக தகவல் தெரிவிக்கின்றனர். இவர் ஏற்கனவே விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
