நடிகை ரேகா அப்படிப்பட்டவர்.. வேண்டவே வேண்டாம்னு சொன்னாங்க!! பிரபல இயக்குநர் ஓபன் டாக்..
ஜெமினி கணேசஷின் மகள் ரேகா
ஜெமினி கணேசஷின் மகளாக இந்திய சினிமாவில் டாப் நடிகையாக 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ரேகா. 4 வயதில் நடிக்க ஆரம்பித்த நடிகை ரேகா, சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் நடித்து மிகப்பெரிய இடத்தினை பிடித்தார்.
15 வயதில் 'தோ ஷிகாரி' படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்த ரேகா, வங்காள மொழி சூப்பர் ஸ்டார் பிஸ்வஜித் சாட்டர்ஜிக்கு ஜோடியாக 32 வயதில் நடித்திருந்தார். 1988ல் கூன் பாரி மாங் என்ற படத்தில் நடிகை ரேகா நடித்திருந்தார். ரேகாவின் இரண்டாம் படமாக இருந்த இப்படத்தினை ராகேஷ் ரோஷன் இயக்கி இருந்தார்.
ராகேஷ் ரோஷனை பொறுத்தவை, ரேகாவை அவர் படத்தில் நடிக்க வைக்க் நினைத்தபோது பலர் தன்னை எச்சரித்ததாக கூறியிருக்கிறார் ரேகா. இதுகுறித்து நியூஸ் ஏஜென்சி, ஏஎன்ஐ-க்கு ரேகேஷ் ரோஷன் அளித்த பேட்டியில், ராகேஷ் ரோஷன் கூன் பாரி மாங் படத்தில் நடிக்கக்கூடாது என்று மக்கள் எச்சரிக்கை விடுத்தப்பின் நடந்த விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
ராகேஷ் ரோஷன்
அதில், மிகச்சில கதாநாயகிகளிடம் மட்டுமே இருக்கும் ஒரு குணம் ரேகாவிடம் இருக்கிறது. தனது எல்லா படத்திலும் அவர் வித்தியாசமாக தெரிவார். நான் அவருடன் ஒரு நடிகராக கூட இரண்டு படங்கள் நடித்துள்ளேன். கூன் பாரி மாங் படத்தில் ஒரு இயக்குநராக அவரை அம்மா வேடத்தில் நடிக்க வைக்க நான் அணுகியபோது, சிலர் அவர் இந்த படத்திற்கு சரியான தேர்வாக அமையமாட்டார் என்றே கூறினார்கள்.
காரணம் அவர் ஒருபோதும் சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வரமாட்டார். எப்போதும் ஷூட்டிங் முடிவதற்கு முன் ஓடிவிடுகிறார் என்று சொன்னார்கள். ஆனால் நான் அவரை பற்றிய அந்த வதந்திகளை இதற்கு முன் கேள்விப்பட்டிருந்தாலும் நம்பியது இல்லை. நான் ரேகாவுடன் பணிபுரிந்த போது, ஒருபோதும் இப்படி அவர் நடந்துகொண்டதில்லை என்று கூறினார்.
மேலும் ரேகாவிடம் கதை கூறும்போது, இது என் இரண்டாவது படம், இது ஒரு கடினமான கதைக்களம், ஒரு பெண் சார்ந்த படம். இப்படத்தில் நான் ஒரு ரிஸ்க் எடுக்கிறேன்.
கதை என்னவென்றால், கிளைமேக்ஸில் மனைவி தன் கணவனைக் கொல்கிறாள் என கதையை விளக்கியப்பின் நேரடியாகவே இந்த படத்தில் நடிக்கும்போது தனக்கு எந்தவொரு தொந்தரவும் கொடுக்கக்கூடாது என கூறினேன்.
அதற்கு நான் எனக்கு பேசிய தொகையை கொடுக்க மறுப்பவர்களை மட்டுமே தொந்தரவு செய்வேன் என்று ரேகா கூறியதாக ராகேஷ் ரோஷன் தெரிவித்துள்ளார். கூன் பாரி மாங் படம் உருவாகி ரிலீஸாகி பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.