விடிந்தால் கல்யாணம்.. வேறு பெண்ணோடு மந்தனாவின் எக்ஸ் காதலன்? வெளியான ஷாக்கிங் தகவல்..
ஸ்மிருதி மந்தனா
இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் அதிரடி வீரரான ஸ்மிருதி மந்தனாவுக்கும் பலாஷ் முச்சலுக்கும் கடந்த 2025 நவம்பர் மாதம் திருமணம் நடக்கவிருந்தது. ஆனால் சில காரணங்களால் திருமணம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் ஸ்மிருதி மந்தனா திருமணத்தில் பலரும் பல கருத்துக்கள் கூறி வந்த நிலையில், அவரின் சிறுவயது நண்பர் விஞ்யான் மானே ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

விஞ்யான் மானே
அதில், திருமண கொண்டாட்டங்களின் போது, பலாஷ் முச்சால் வேறொரு பெண்ணுடன் படுக்கையறையில் நெருக்கமாக இருந்ததை ஸ்மிருதியின் நண்பர்கள் பார்த்துவிட்டதாகவும் இதைப் பார்த்ததும் அங்கிருந்த இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் கடும் கோபமடைந்தது பலாஷை பிடித்து சரமாரியாக அடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பலாஷ் குடும்பத்தினர் ஸ்மிருதியை ஏமாற்றிவிட்டதாகவும் வெறும் திருமண விவகாரத்தை மட்டும் பேசாமல், பலாஷ் மீது பண மோசடி புகாரையும் விஞ்யான் மானே சுமத்தியுள்ளார்.

மேலும், பலாஷ் தனது திரைப்படத்திற்காக தன்னிடம் ரூ. 40 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும், படம் ரிலீஸ் ஆக கூடுதல் பணம் வேண்டும் என்றும், இல்லையென்றால் முதலீடு செய்த பணத்தைத் தரமாட்டோம் என்றும் பலாஷின் தாயார் அமிதா முச்சால் தன்னை மிரட்டியதாகவும் மகாராஷ்டிராவின் சாங்லி பகுதியில் அவர் காவல்துறையில் மானே புகார் அளித்துள்ளார்.
பலாஷ்
விஞ்யான் மானே குற்றச்சாட்டு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலாஷ், என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை மற்றும் தவறானவை. எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற தீய நோக்கத்தில் இவை கூறப்பட்டுள்ளன.
இதை நான் சும்மா விடமாட்டேன். எனது வழக்கறிஞர் மூலம் சட்டப்படி இதனை எதிர்கொள்வேன் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து பலாஷ், ஸ்மிருதி மந்தனாவுடன் எடுத்த புகைப்படங்களை டெலீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.