மகள் ஈஷாவுக்கு அம்பானி கொடுத்த 3 டார்க்கெட்..ரிலையன்ஸ் ரிடைல்-ஐ 2028ல் பட்டியலிட முடிவு!
முகேஷ் அம்பானி
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களாக இருக்கும் முகேஷ் அம்பானி உலகின் டாப் பணக்காரர்கள் லிஸ்ட்டில் 18வது இடத்தில் இருந்து வருகிறார்.
முகேஷ் அம்பானி, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மட்டுமே நம்பியிருக்க கூடாது, அதிலேயே இருந்தால் பெரியளவில் வளர்ச்சி அடைய முடியாது என்று 2013 முதல் மக்களுக்கு நேரடியாக பொருட்கள் மற்றும் சேலைகளை விற்க முடிவு செய்தது.

அதன்படி B2C-ஐ காட்டிலும் B2B வர்த்தகத்தில் அதிக லாபம் உள்ளது என்பதாலும் அதில் வர்த்தக ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்றால் கட்டாயம் பி2பி வர்த்தகம் கைக்கொடுக்கும் என்பதாலும் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைலை உருவாக்கி பல லட்சம் கோடி ரூபாய் லாபம் பெற்று வருகிறார்.
IPO - டெலிகாம்
அந்தவகையில் டெலிகாம் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் ரிலையன்ஸ் ஜியோ, ஐபிஓ மூலம் பட்டியலிடுவதற்கான திட்டத்தை செயல்படுத்தி டிசம்பர் மாதம் டெலிகாம் சேவைக்கான கட்டணத்தை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

இதனால் ஐபிஓ வெளியிடும் போது ரிலையன்ஸ் ஜியோ சிறப்பான லாப மார்ஜினுடன் பட்டியலிடப்படும். இதன்மூலம் அதிகப்படியான மதிப்பீட்டையும் லாபத்தையும் பெறும். இதே கட்டமைப்பை தான் ரிலையன்ஸ் ரீடைல் பிரிவிலும் கொண்டு வர முடிவெடுத்துள்ளார் முகேஷ் அம்பானி.
அந்தவகையில் ஐபிஓ சீசனாக இருக்கும் வேலையில், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் ரிலையன்ஸ் ரீடைல் பிரிவை ஐபிஓவுக்கு தயார்படுத்தும் விதமான ரிலையன்ஸ் ரீடைல் பிரிவை நிர்வாகம் செய்யும் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி, அடுத்த 2 ஆண்டுகளில் கடை விரிவாக்கம், கடன் குறைப்பு, குவிக் காமர்ஸ் துறை வர்த்தகம் மேம்பாடு உள்ளீட்டவைகளுக்கு முன்னுரிமை அளிக்கவுள்ளாராம்.

2000 கடைகள்
இதனால் ஐபிஓவுக்கு முன் நிறுவனத்தின் மதிப்பை உயர்த்தும். தற்போது ரிலையன்ஸ் ரீடைல் ஆண்டுக்கு 2000 புதிய கடைகளை தொடங்க திட்டமிட்டதில் செப்டம்பர் காலாண்டில் மட்டும் 412 கடைகளை தொடங்கி ஆண்டுக்கு 2000 கடைகளை விரிவாக்கம் செய்யவுள்ளது.
நாடு முழுவதும் ரிலையன்ஸ் ரீடைலின் கீழ் இயங்கும் பிராண்டுகளில் 19,821 கடைகள் செயல்பட்டு வருகிறதாம். இதைவிட முக்கியமாக இந்தியாவில், வர்த்தகமாக மாறியிருக்கும் குவிக் காமர்ஸ் துறையில் பெரியளவில் இறங்க முடிவெடுத்துள்ளது.
நாட்டின் முக்கிய நகரங்களில் அதிகப்படியான டார்க் ஸ்டோர்கள் தொடங்கும் பணியிலும் தீவிரப்படுத்தியிருக்கிறார். ஏற்கனவே ஐபிஓ பட்டியலிட்ட பின் ரீடலில் மெட்ரோ பிராண்ட் கடைகளை கைப்பற்றி மொத்த விற்பனையிலும் பெரும் சந்தை வர்த்தகத்தை வைத்து மிகப்பெரியளவில் லாபம் பார்த்து வருகிறது என்பது கூறிப்பிடத்தக்கது.