2 முறை விவாகரத்து.. மூன்றாம் காதலனுக்கு ஸ்கெட்ச் போட்ட 40 வயது நடிகை
Reshma Pasupuleti
By Dhiviyarajan
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலக்ஷ்மி சீரியலில் நடித்து வருபவர் ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்தில் சூரியின் மனைவியாக நடித்து பிரபலமானர்.
இதையடுத்து இவர் கடந்த ஆண்டு விமல் நடிப்பில் வெளியான 'விலங்கு' வெப் தொடரில் நடித்து அசத்தினார்.

மூன்றாம் காதலா?
சமீபத்தில் ரேஷ்மா நிஷாந்த் ரவிச்சந்திரன் என்ற ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
மேலும் அவர், வாழ்க்கை என்பது குறுகலானது அதனால் உங்களை மகிழ்விக்கும் மற்றும் அன்பு காட்டும் நபர்களுடன் நேரத்தை செலவிடுங்கள் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் ரேஷ்மா மீண்டும் காதலிக்கிறாரா என்று கேட்டு வருகின்றனர்.
40 வயதான ரேஷ்மா இதற்கு முன்பு இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.
