ராஜினாமா செய்தது கோழைத்தனம்!! மோகன்லாலை வெளுத்து வாங்கிய தங்கலான் பட நடிகை..
மலையாள சினிமாவில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி நடிகர்கள் மீதான பாலியல் புகார் விவகாரம்தான். இதுகுறித்து பல தரப்பில் இருந்து கேள்விகளும், விவாதங்களும் எழுந்து வரும் நிலையில், சினிமா நட்சத்திரங்கள் கொந்தளித்து கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கேட்பவர்களை சினிமா ரசிகர்களும் பிரபலங்களும் கண்டடி திட்டியும் வருகிறார்கள். இந்நிலையில் மலையாள நடிகையும் தங்கலான் பட நடிகையுமான பார்வதி பாலியல் புகார் குறித்து கருத்து ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
கோழைத்தனமான செயல்
நடிகர்கள் மீதான பாலியல் புகார் குறித்து உரிய பதிலளிக்காமல் ராஜினாமா செய்வது என்பது கோழைத்தனமான செயல் என்று எனக்கு தோன்றியது. இதுபற்றிய உரையாடல்களையும் விவாதங்களையும் முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு மீண்டும் பெண்கள் மீது விழுந்துள்ளது.

குறைந்தபட்சம் மாநில அரசுடன் இணைந்து ஒரு வழியைக் கண்டுபிடிக்கும் நோக்கத்தையாவது அவர்கள் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று பார்வதி கருத்தினை கூறியிருக்கிறார்.
இதுதொடர்பான செய்திகள் பரவிய நிலையில் மலையாள நடிகர் சங்க பொறுப்புகளில் இருந்து மோகன்லால் உள்ளிட்ட பலர் பதவி விலகிய நிலையில் நடிகை பார்வதி இப்படியான கருத்தினை பயம் இன்றி வெளிப்படையாக பேசியதை பலரும் ஆதரித்தபடி கருத்துக்களை கூறி வருகிறார்கள்.