உதயநிதியுடன் எடுத்த செல்ஃபியால் வெடித்த சர்ச்சை!! விளக்கமளித்த நடிகை ரித்திகா..
நடிகை ரித்திகா
துணை முதல்வரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த 27 ஆம் தேதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
அதில் நடிகை ரித்திகா, உதயநிதி ஸ்டாலினுடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தோடு ஹாப்பி பர்த்டே என்று கூறி ஒரு பதினை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இந்த போட்டோவை ஏராளமானோர் வில்லங்கமாக கமெண்ட் செய்து டிரெண்ட்டாக்கினார்கள்.
இந்த புகைப்படத்தை ஏன் இவ்வளவு லைக் வந்தது என்று பதறிப்போன நடிகை ரித்திகா, அதற்கு வந்த கமெண்ட்களை படித்து ஷாக்காகியுள்ளார். அப்புகைப்படத்திற்கான பின்னணி என்ன என்பதை ரித்திகா விளக்கமளித்து ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

உதயநிதியுடன் எடுத்த செல்ஃபி
அதில், சரவணன் இருக்க பயமேன் என்ற படத்தின் ஷூட்டிங்கின் போது எடுத்தது. அதனால் அதனை பதிவிட்டு உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினேன். அதேபோல் கோட் படத்திலும் ஒரு சின்ன ரோல் வாய்ப்பு கிடைத்தது. அது ரொம்ப குட்டி ரோல் என்பதால் நிராகரித்துவிட்டேன். ஆனால் அதில் நான் நடித்து விஜய் சாருடன் ஒரு செல்ஃபி எடுத்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.

ஒன்னு தெரிஞ்சிக்கோங்க, இவங்க எல்லாம் என்னுடைய சக நடிகர்கள், அவர்களோடு நான் போட்டோ எடுத்திருந்தால் நிச்சயம் பிறந்தநாளுக்கு அவர்களுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிடுவேன். உதயநிதி சாருடன் நான் போட்ட போட்டோவுக்கு அவ்ளோ கமெண்ட் போட்டிருக்கிறீர்கள். நிறைய பேர் அரசியல் பார்வையோடும் பதிவிட்டிருப்பதற்கு நான் சந்தோஷப்படுகிறேன்.
ஆனால் இதை என்னுடைய கமெண்ட் பாக்ஸில் காட்டி எந்தவித பயனுமில்லை, இதையெல்லாம் உங்களுடைய ஓட்டிங்கில் காட்டுங்கள். யார் உங்களுக்கு பிடிக்குமோ, அவர்களுக்கு வாக்களியுங்கள். அதைவிட்டுவிட்டு என்னுடைய போட்டோவுக்கு கமெண்ட் செய்வதால் எந்த பயனும் இல்லை என்று கூறியிருக்கிறார் நடிகை ரித்திகா.