கனிமா சாங் ரீ-கிரியேட்!! லட்சம் ரீல்ஸ் வந்திருந்தாலும் பூஜா ஹெக்டே ஆடுறது தனி ரகம்..
Pooja Hegde
Tamil Actress
Actress
Coolie
By Edward
பூஜா ஹெக்டே
கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிக்கொண்டிருக்கும் நடிகை பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் அடுத்ததாக தமிழில் ரெட்ரோ படம் வெளிவரவுள்ளது.
இப்படத்திலிருந்து வெளிவந்த பாடலுக்கு பூஜா ஆடிய நடனம் அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக அவர் போட்ட ஸ்டப் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரெட்ரோ படத்தை தொடர்ந்து பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். பீஸ்ட் படத்திற்கு பின் மீண்டும் இப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார்.
கனிமா சாங் ரீ-கிரியேட்
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பூஜா ஹெக்டே, ரெட்ரோ படத்தில் ட்ரெண்டாகி வரும் கனிமா பாடலுக்கு ஆட்டம் போட்டு ரிகிரியேட் செய்துள்ளார். அவரின் க்யூட்டான அந்த நடனம் இணையத்தில் படுபயங்கரமாக வைரலாகி வருகிறது.
OG version of Kannima 🥳 pic.twitter.com/l3kceXALwW
— Sekar 𝕏 (@itzSekar) April 16, 2025