வசூலில் அடிவாங்கிய ரெட்ரோ.. இந்த படமும் சூர்யாவிற்கு கைகொடுக்கவில்லையா?
Suriya
Box office
Retro
By Kathick
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தில் பூஜா ஹெக்டே சூர்யாவின் ஜோடியாக நடித்திருந்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. வசூல் ரீதியாகவும் சரிவை சந்தித்துள்ளது. முதல் நான்கு நாட்களில் வசூலில் நல்ல வரவேற்பை பெற்ற ரெட்ரோ, அடுத்தடுத்த நாட்களில் பின்னடைவை சந்தித்தது.
இந்நிலையில், 13 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் இப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் 13 நாட்களில் உலகளவில் ரூ. 98 கோடி வசூல் செய்துள்ளது. இது எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவான வசூல் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.