35 வருஷ வாழ்க்கையில் இந்த தப்பால எல்லாம் போச்சி! புலம்பும் நடிகை ரேவதி.
தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ரேவதி. முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தென்னிந்திய சினிமாவில் கலக்கியவர். 1986ல் சுரேஷ் சந்திர மேனனை திருமணம் செய்து கொண்ட ரேவதி சில கருத்து வேறுபாடு காரணமாக 2013ல் விவாகரத்து பெற்று பிரிந்தார்.
இதையடுத்து, இதற்கு முன்பே இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில் டெஸ்ட் டியூப் மூலம் மஹி என்ற பெண் குழந்தையை பெற்றார். இது என் குழந்தை தான் என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். நடிகை ரேவதி 17 வயதிலேயே சினிமாவுக்கு வந்து இருபது வயதிலேயே திருமணம் செய்து கொண்டவர்.
அதுவும் புன்னகை மன்னன் படம் வெளியான பிறகு ரேவதிக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்து குவிந்து கொண்டிருந்த நேரம் அது.
அந்த நேரத்தில் திடீரென திருமணம் செய்து கொண்டேன். அந்த தவறை மட்டும் செய்யாமல் இருந்திருந்தால் இந்நேரம் என்னுடைய வாழ்க்கை நான் நினைத்த மாதிரி நல்லபடியாக அமைந்திருக்கும் என கூறுகிறார் ரேவதி.