ஆண்கள் பாவம்..பெண்களிடமே சொல்லிட்டு இருக்கோம்!! நடிகை ரேவதி ஆதங்கம்...
ரேவதி
70, 80களில் தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்தவர்களில் ஒருவர் தான் நடிகை ரேவதி. தற்போது இயக்குவதிலும், குணச்சித்திர ரோலில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், பெண்களின் பாதுகாப்பு, ஆண்களின் பகுத்தறிவு பற்றி பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதில், ஆண்கள் பாவம், எத்தனை நாள் பெண்களிடம் மட்டும் சொல்ல போகிறோம்? என்ன சொல்ல போகிறோம்? பெண்களுக்கு மட்டும் விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறோம், அதைவிட ஆண்களுக்கு சரியான புரிதலை ஏற்படுத்தி வளர்க்க வேண்டும்.

ஒரு பெண் எப்போதும் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டு கொடுப்பது மட்டுமே தீர்வாகிவிடாது. ஆண் குழந்தைகளுக்கும் சிறுவயதில் இருந்தே பெண்களை எப்படி மதிக்க வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும், தவறான செயல்கள் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
வீட்டில் இருந்தே இப்படியான புரிதல் உருவாகினால் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளை தவிர்க்க முடியும் என்று ரேவதி விழிப்புணர்வுடம் பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.