ஷாருக்கானிடம் அமைதியாக இருங்கன்னு சொன்ன அனந்த் அம்பானி வீடியோ!! நோட்டீஸ் அனுப்பினாரா கான்..

Viral Video Shah Rukh Khan Gossip Today Mumbai Anant Ambani
By Jai Nov 26, 2026 11:45 AM GMT
Report

மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் அனந்த் அம்பானி இருவரும் ஆன்மீக குரு சத்குருவை மேடையில் சென்று சந்தித்தனர். அப்போது அனந்த் அம்பானி, சத்குருவுடன் பேசிக் கொண்டிருந்தபோது, ஷாருக்கான் குறுக்கிட்டு சில வார்த்தைகளை பேசினார்.

ஷாருக்கான் - அனந்த் அம்பானி வீடியோ

அப்போது அனந்த் அம்பானி, கொஞ்சம் அமைதியாக இருக்கும்படி கூறுவது போல் விரலை காட்டி சைகை செய்தார். இந்த வீடியோவை சோசியல் மீடியா பிரபலம் சுவிக்யா சர்மா இணையத்தில் பகிர்ந்தார். இதனையடுத்து வீடியோ டிரெண்ட்டாக, அந்த இன்ஃப்ளூயன்சருக்கு சட்ட நோட்டீஸ் அனுப்பட்டதாக செய்திகள் பரவியது.

ஷாருக்கானிடம் அமைதியாக இருங்கன்னு சொன்ன அனந்த் அம்பானி வீடியோ!! நோட்டீஸ் அனுப்பினாரா கான்.. | Shah Rukh Khan Sent Legal Notice To Influencer

அந்த நோட்டீஸில் 48 மணிநேரத்திற்குள் அந்த வீடியோவை நீக்க உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், தங்கள் தரப்பிலிருந்து எந்த நோட்டீஸும் அனுப்பப்படவில்லை என்று ஷாருக்கான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஷாருக்கான் தரப்பில், 23 நவம்பர் 2026ல் ஒரு சட்டப்பூர்வ அறிவிப்பு, சோசியல் மீடியாக்களிலும், சில செய்தி அறிக்கைகளிலும் பரப்பட்டு வருகிறது. ஷாருக்கானின் அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் என்ற முறையில், இந்த அறிவிப்பு அவராலோ, அவர் சார்பாகவோ வழங்கப்படவில்லை. எங்களை உள்ளடக்கிய எந்தவொரு வழக்கறிஞருக்கோ, சட்ட நிறுவனத்திற்கோ நோட்டீஸ் வழங்குமாறு கான் அறிவுறுத்தவில்லை. ஊடக நிறுவனங்களும், சமூக ஊடகப் பக்கங்களும் செய்தி வெளியிடுவதற்கு முன் இதை சரிபார்க்கவும். இந்த அறிவிப்பு மிஸ்டர். கானுக்கு உரியது என்று கூறும் உள்ளடக்கத்தை திருத்தவோ, அகற்றவோ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று ஷாருக்கான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Gallery