நடிகர் முதல் போலிஸ் அதிகாரி உட்பட 14 பேர்! பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை
சினிமாத்துறையில் பாலியல் ரீதியாக பல பெண்கள் கொடுமைப்படுத்தி வருவது சமீபகாலமாக வெளிச்சத்திற்கு வந்தவண்ணம் உள்ளது. அந்தவகையில் தன்னை பாலியல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் துன்புறுத்தியவர்களின் 14 பேர் கொண்ட நடிகர் முதல் போலிஸ் அதிகாரிகளின் புகைப்படத்தினை வெளியிட்டு மலையாள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகை ரேவதி சம்பத்.
பட்னாகர் என்ற படத்தின் மூலம் 2019ல் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ரேவதி. மலையாள நடிகையாகவும், உளவியல் நிபுணர், சமுக ஆர்வலர் என்று பன்முகத்திறமை கொண்டு பிரபலமானார். இதையடுத்து சினிமாவில் அறிமுகமான சில நாட்கள் முதலே தனக்கு நடந்த பாலியல் மற்றும் மனரீதியாக துன்புறத்தல் செய்தவர்களின் புகைப்படத்தோடு பெயரையும் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
அதில் நடிகர் சித்திக், ரேவதியின் முதல் படமான பட்னாகர் படத்தின் இயக்குநர் ராஜேஷ் தொச்சிவர், ஆஷிக் மஹி, நடிகர் சிஜூ, கேரள ஃபேஷன் லீகின் ஃபவுண்டர் அம்ஹில் தேவ், டாக்டர் அஜய் பிரபாகர், குறும்பட இயக்குநர் மேக்ஸ்வெல் ஜோஸ், நடிப்பு சொல்லித்தந்த காஸ்ட்டிங் டைரக்டர் ரெஜந் பாய், விளம்பரப் பட தயாரிப்பாளரான ஷனூப் கர்வத், வங்கி ஏஜென்ட் சருன் லியோ, சப் இன்ஸ்பெக்டர் பினு என்று நீள்கிற குற்றச்சாட்டுப் பட்டியலில்,
எம்.எஸ்.பதுஷும் நந்து அசோகனும் என்னை துஷ்பிரயோகம் செய்தவர்கள், சவுரப் கிருஷ்ணன் இணையத்தில் என்னைக் கேலி செய்தவர் என 14 பேர் இதில் சிக்கியுள்ளனர்.
இது விளம்பரத்திற்காகவா இல்லை உண்மையா என்று போலிசில் புகார் அளித்து வெளிச்சத்திற்கு கொண்டுவந்தால் மட்டுமே தெரியவரும் என்று பலர் கூறி வருகிறார்கள்.