தனக்குத்தானே இரண்டாம் திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை!! வைரலாகும் வீடியோ

Star Vijay Baakiyalakshmi Rithika Tamil Selvi
By Edward Feb 14, 2023 02:00 PM GMT
Report

சின்னத்திரை தொலைக்காட்சி சேனலில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவது சீரியல்கள் தான். அப்படி ஸ்டார் விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் ஆதரவை பெற்று வரும் சீரியல் பாக்கியலட்சுமி.

தனக்குத்தானே இரண்டாம் திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை!! வைரலாகும் வீடியோ | Ritika Explain Video For Baakiyalakshmi Marriage

விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியலில் தான் காதலித்த அமிர்தாவை, பாக்யா பல எதிர்ப்புகளை மீறி திருமணம் செய்து வைத்துள்ளார். அப்படி சீரியலில் எழில் தாலி கட்டுவது போன்ற காட்சி அமைந்திருக்கும்.

அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரித்திகா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் இந்த காட்சியை எடுக்க சில முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டதாம்.

அந்தவகையில் அமிர்தா இப்படித்தான் திருமணம் செய்து கொண்டார் என்று கூறி ஒரு வீடியோவை ரித்திகா பகிர்ந்துள்ளார். அதில் தனக்குத்தானே தாலியை கட்டிக்கொண்டுள்ளார் ரித்திகா. இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் கலவையான கருத்துக்களை கூறியும் வருகிறார்கள்.