ராஜா ராணி சீரியல் காவியாவுக்கு திருமணமா? சீரியலைவிட்டு விலக காரணத்தை கூறிய நடிகை ரியா..
விஜய் தொலைக்காட்சியில் பல இரு ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ராஜா ராணி 2. சித்து மற்றும் ஆலியா மானாசா ஆரம்பத்தில் இந்த சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்தனர்.
அதன்பின், ஆலியா கர்ப்பமாகி 9வது மாதம் வரையில் நடித்து அதன்பின் சீரியலில் இருந்து விலகிவிட்டார். அவருக்கு பதில் மாடலிங்துறையில் இருந்த ரியா விஸ்வநாதன் நடித்து வந்தார்.
ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள் அதன்பின் அவரை ஏற்றுக்கொண்டு அவருக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உருவான நிலையில் ராஜா ராணி 2வில் இனிமேல் காவியாவாக நான் இல்லை என்று கூறி வீடியோவை வெளியிட்டார். அவருக்கு பதில் சீரியல் நடிகை ஆஷா கவுடா காவியாவாக நடித்து வருகிறார்.
இனி IPS சந்தியா வாக ?
— Vijay Television (@vijaytelevision) February 16, 2023
ராஜா ராணி - இன்று இரவு 7 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #RajaRani2 #VijayTelevision pic.twitter.com/goDrxr7cfO

இந்நிலையில் நடிகை ரியா சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் என்ன காரணம் என்றும் கூறுவேன் என்று சமீபத்தில் இன்ஸ்டா லைவ்வில் ரசிகர்களுடன் உரையாடியிருக்கிறார்.
ஒரு ரசிகர் நீங்கள் திருமணம் செய்ய போகிறீர்கள் என்பதால் தான் ராஜா ராணி சீரியலில் இருந்து விலகிவிட்டீர்கள் என்ற செய்தி உண்மையா? என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு ரியா, அப்படியில்லை, அந்த வதந்திகள் எல்லாம் பொய். தற்போது 2, 3 வருடங்களில் திருமணத்திற்கான பிளான் எதுவும் எனக்கு இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் ஒருசிலரின் செய்கையால் தான் நீங்கள் விட்டு விலகி போகிறீர்கள் என தெரியும் என்று பல கேள்விகளை கேட்டு அதை ரியா பகிர்ந்தும் இருக்கிறார்.




