கமல் ஹாசன் கொடுத்த வாய்ப்பை தூக்கி எறிந்த நடிகர்!! உசுப்பேத்தி விட்ட பிரபல இயக்குனர்..

Kamal Haasan Sundar C Lokesh Kanagaraj RJ Balaji Indian 2
By Edward Jan 23, 2024 05:30 AM GMT
Report

பிரபல வானொலியில் ஆர் ஜே-வாக பணியாற்றி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் விஜே-வாக பணியாற்றி பிரபலமானவர் ஆர்ஜே பாலாஜி. படங்களை விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கிய பாலாஜி, 30க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராகவும் நடித்து பிரபலமானார். மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற படங்களை இயக்கி இயக்குனராகவும் திகழ்ந்து வந்தார்.

தற்போது சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் நடித்துள்ள ஆர் ஜே பாலாஜி அப்படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் விஜே சித்து எடுத்த பேட்டியொன்றில், சிங்கபூர் சலூன் படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜின் LCU-வில் வாய்ப்பு கிடைக்கத்தான் அவரை நடிக்க வைத்திருக்கிறார்களா? என்று கேட்டுள்ளார் சித்து.

கமல் ஹாசன் கொடுத்த வாய்ப்பை தூக்கி எறிந்த நடிகர்!! உசுப்பேத்தி விட்ட பிரபல இயக்குனர்.. | Rj Balaji Share Why Reject Kamal Indian 2 Chance

லோகேஷ் மாநகரம் படத்திற்கு பின் எடுத்த எல்லா படத்தின் கதையையும் முதன்முதலில் என்னிடம் சொல்லிவிடுவார். ஒரு கேரக்டர் இருக்கிறது பண்றியா? செமையா இருக்கும் என்று நிறைய முறை கேட்டிருக்கிறார். இப்படி சின்ன ரோலில் நடிச்சிருந்தால், நானும் ரவுடி தான் படத்திற்கு பின்பே நடித்திருப்பேன். அது எனக்கு பிடிக்காது. நம்மலே எழுதி என் மேல் படம் இருக்கனும் ஆசைப்பட்டேன். அதனால் LCUவில் ஒரு பார்ட்டாக இருக்கணும் என்ற ஆசை இல்லை.

ஒருவர் என்னிடம் சிங்கத்துக்கு வாலாக இருப்பதைவிட எலி தலையாக இருந்திடலாம். ஏன் அதை சொன்னார் என்றால், இந்தியன் 2 படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்து நடிப்பதாக இருந்தேன். படம் கொஞ்சம் நாள் கழித்து தான் ஷூட்டிங் ஆரம்பித்தது. அதுக்குள்ள எல்கேஜி படம் ஆரம்பித்துவிட்டது.

காசு கொடுத்து அசிங்கப்படுத்திய சிவகார்த்திகேயன்!! வருத்தபட்ட பிரபல நடிகர்..

காசு கொடுத்து அசிங்கப்படுத்திய சிவகார்த்திகேயன்!! வருத்தபட்ட பிரபல நடிகர்..

ஓரளவுக்கு படம் ஓட, இந்தியன் 2, பெரிய படம், அதிக சம்பளம், பண்ணலாமா வேண்டாமா என்று நினைக்கும் போது இயக்குனர் சுந்தர் சி வந்தார். உங்க படமே உங்களுக்கு பெரிதாக ஓடுகிறது. இன்னொருத்தவர் படத்தில் ஏன் பண்ணனும், நல்ல ரோலாக இருந்தால் எதுக்கு பண்ணனும் என்று சொன்னார்.

அதனால் தான் மூக்குத்தி அம்மன் படத்தை எடுத்து என் வழியில் செல்ல முடிந்தது. அதனால் LCUவில் ஒரு பார்ட்டாக இருக்கனும் என்று தோன்றவில்லை என்று ஆர்ஜே பாலாஜி கூறியிருக்கிறார்.