விஜய் டிவிக்கு பாய் சொல்லப்போகும் கோபிநாத், பிரியங்கா!! ஆர்ஜே ஷா சொன்ன தகவல்..
கோபிநாத், பிரியங்கா
டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரை சமீபத்தில் முகேஷ் அம்பானி வாங்கி, ஜியோ ஹாட் ஸ்டார் என பெயரை மாற்றம் செய்து ஐபிஎல் போட்டிகளை ஒளிப்பரப்பு செய்து வருகிறது.
இதனை தொடர்ந்து கலர்ஸ் டிவியை வயகாம் நெட்வொர்க் மூலம் நடத்தி வரும் அம்பானி, விஜய் டிவியையும் வாங்கிவிட்டார்கள் என்றும் அதன்காரணமாக விஜய் டிவி படங்கள் எல்லாம் சமீபகாலமாக கலர்ஸ் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது.
அடுத்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியே கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் என்று கூறப்படுகிறது. விஜய் டிவியில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் பல தொகுப்பாளர்களின் வேலை இதனால் போகும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் திருமணத்தை முடித்த பிரியங்காவும் விஜய் டிவியில் இருந்து விலகப்போவதாக தகவல் வெளியானது.
ஆர் ஜே ஷா
இந்நிலையில் பிரியங்கா விஜய் டிவியில் இருந்து விலகப்போவதாக வெளியாகும் தகவல் உண்மையில்லை என்றும் ஹனிமூன் முடிந்து மீண்டும் விஜய் டிவிக்கு திரும்புவார் என்று ஆர் ஜே ஷா அவரது ஷோவில் தெரிவித்துள்ளார்.
அதேபோல், மும்மொழிக் கொள்கை' தொடர்பான நீயானா நானா ஷோ ஒளிபரப்பாமல் நிறுத்தப்பட்டதால் கோபிநாத் அப்செட் ஆகிவிட்டார் என்றும் 18 ஆண்டுகளாக நீயா நானா நிகழ்ச்சியை நடத்தி வரும் அவருக்கு தொடர்ந்து ஒரு பெரிய சேனல் பெரிய சம்பளத்துடன் ஆஃபர் கொடுத்து கோபிநாத்தை அழைத்து வருவதாகவும் அதன் காரணமாக அவர் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் பேச்சுக்கள் எழுந்தது.
ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்றும் நீயா நானா நிகழ்ச்சியும் ரத்து செய்யப்படாது, கோபிநாத்தும் அந்த ஷோவை விட்டு வெளியேறமாட்டார் என நெருங்கிய வட்டாரத்தில் தகவ்ல் பெற்றதாக ஆர்ஜே ஷா தெரிவித்திருக்கிறார்.