விஜய்யை வைத்து அஜித்தை அசிங்கப்படுத்திய இயக்குனர்! வெச்சு செய்யும் ரசிகர்கள்..
திரையுலகை பொருத்தவரையில் அனைத்து விதமான பணிகளை செய்யும் தொழிலாளர்கள் ஒரு படத்தால் தான் வாழ்க்கையே அடக்கி வைத்துள்ளனர். அதிலும் பெரிய நடிகர்களின் படங்கள் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் என்பதால் தொழிலாளர்கள் அதையே நம்பி இருப்பார்கள்.
ஆனால் வெளிநாடு மற்றும் மற்ற மாநிலங்களில் படப்பிடிப்பினை வைத்தால் தமிழ் தொழிலாளர்களின் வாழ்க்கை பாதிப்படைந்து வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது. அதற்காக தயாரிப்பாளர் சங்கத்தை போன்று பெப்சி என்ற அமைப்பும் செயல்பட்டு வருகிறது.
இதன் தலைவராக இயக்குனர் ஆர்கே செல்வமணி இருக்கிறார். இன்று நடத்தப்பட்ட பிரஸ்மீட்டில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று ஷூட்டிங்கை வைப்பதை தவிர்க்க வேண்டும். அங்கு சென்று ஷூட்டிங் வைப்பது தவறில்லை.
தேவைக்கேற்ப அங்கு சென்று படப்பிடிப்பு நடத்துங்கள். ஆனால் சென்னையில் இருக்கும் இடங்களுக்கு செட் போட்டும் நடத்துங்கள் என்று கூறியுள்ளார். மேலும், இதுகுறித்து ரஜினி, விஜய்யிடம் கோரிக்கை வைத்து பேசினோம். அவர்களும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம் கூறி இங்கேயும் படப்பிடிப்பை நடத்துவதாக கூறினார்கள்.
அஜித்தின் ஏகே 61 படம் ஹைதராபாத்தில் தான் ஷூட்டிங்கினை வைத்துள்ளார்கள். இதனால் அஜித்தும் தயவு செய்து இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டு பேசியுள்ளார்.
இதற்கு அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு சென்னை மதுரை என தமிழகத்தில் தான் நடைபெற்றது. ஆனால் தற்போது விஜய் தளபதி 66 படத்திற்காக நேற்று ஹைதராபாத் சென்றுள்ளரே அது தெரியவில்லை என கூறி ஆர்கே செல்வமணியை விளாசி வருகிறார்கள்.
மேலும் இதற்காக தயாரிப்பாளர் போனி கபூர் கூட புதுச்சேரி முதல்வரை பார்த்து பெரிய படங்களை எடுக்க சந்தித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.