யாரும் மதிக்கல..அவங்க செஞ்ச அவமானம்தான்!! மேடையில் எமோஷனலான ஆர்கேசெல்வமணி
இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி 1990ல் புலன் விசாரணை படத்தினை இயக்கி இயக்குநரானவர் தான் இயக்குநர் ஆர் கே செல்வமனி. இப்படத்தினை தொடர்ந்து பல படங்களை இயக்கி வந்த ஆர் கே செல்வமணி, தற்போது இயக்குநர் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார்.

அவரை போல் 90ஸ் காலக்கட்டத்தில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் ஆனந்த் ராஜ். தற்போது பல படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆர் கே செல்வமணி, ஆனந்த் ராஜுக்குமான உறவு குறித்து நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆர் கே செல்வமணி
அதில் ஆர் கே செல்வமணி பேசுகையில், ஆனந்த் ராஜும் நானும் ஒன்றாக பிலிம் இன்ஸ்ட்டியூட்டில் படித்தோம். அப்போதே ஆனந்த் ராஜ் பெரிய பண்ணையார் போல் ஜிப்பா எல்லாம் போட்டுக்கொண்டு, மேலே ஒரு துண்டைப் போட்டுக்கொண்டு வருவார்.

அப்போது எங்களை யாருமே மதிக்கவில்லை, ஆனந்த் ராஜை யாரும் அங்கு நடிப்பதற்கு கூப்பிடவில்லை. நானும் இயக்குநராவேன் என்று யாரும் நினைக்கவில்லை.
தமிழ் சினிமாவில் நாங்கள் மிகப்பெரிய உயரத்தை அடைந்ததற்கு காரணம் அந்த அவமானங்கள் தான் என்று ஆர் கே செல்வமணி, ஆனந்த் ராஜை அணைத்தபடி இந்த விஷயத்தை மேடையில் பேசியிருக்கிறார்.