நடிகர்களை கெடுத்து, சினிமாவை அழித்தது ஓடிடி தளங்கள் தான்!! ஆதங்கப்பட்ட ஆர் கே செல்வமணி...
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக திகழ்ந்து தற்போது FEFSI அமைப்பின் தலைவராக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் வெப் தொடர் ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றில் ஓடிடி தளம் பற்றி பேசியிருக்கிறார். சினிமாவை கெடுத்ததே ஓடிடி தளங்கள் தான் என்றும் ஓடிடி தளங்கள் வந்த புதிதில் அதிகமான விலையை கொடுத்து எங்களை கெடுத்துவிட்டீர்கள் என்றும் பேசியிருக்கிறார்.

ஆர் கே செல்வமணி
சினிமாத்துறையை கெடுத்ததில் முதல் பங்கு நீங்கள் ஹான், ரூ 10 கோடி சம்பளம் வாங்கிய நடிகருக்கு ரூ. 100 கோடி சம்பளம் கொடுத்து இன்று நஷ்டமாகிறது என்று படத்தை வாங்குவதை நிறுத்திவிட்டீர்கள். நீங்கள் நிறுத்திவிட்டாலும் சம்பளத்தை உயர்த்தியவர் யாரும் இறங்கி வருவதில்லை. உச்சாணி கொம்பிளே அமர்ந்திருக்கிறார்கள், நாங்கள் கீழேயே நிற்கிறோம்.
அவர்கள் என்றாவது இறங்கி வருவார்கள், அவர்களை வைத்து படம் எடுக்கலாம் என்று காத்திருக்கிறோம், ஆனால் அவர்கள் இறங்கி வரவில்லை. சம்பளத்தை ஏற்றிவிட்டவர்களும் கடையை சாத்தி கிளம்பிவிட்டீர்கள்.
இப்போது பெரிய படங்களின் சூட் போவதற்கே கஷ்டமாக இருக்கிறது. இதனால் திரைப்பட துறையோடு கலந்து பேசி அதற்கான முடிவை எடுக்க வேண்டும்.

சினிமா நன்றாக இருந்தால்தான் மற்ற ஊடங்கங்களும் நன்றாக இருக்க முடியும், நாங்கள் படத்தை எடுத்தால் தானே நீங்கல் திரையிட முடியும். இதனால் அனைத்து ஓடிடி தளங்களுக்கும் ஊடகங்களுக்கும் இதன் மூலமாக வேண்டுகோளை வைக்கிறேன்.
புலன் விசாரணை
நான் புலன் விசாரணை படத்தினை இயக்கும்போது ஒரு லைட்மேன், டிரைவர் சம்பளத்தைவிட மிகவும் குறைவான சம்பளத்தை வாங்கினேன். சம்பளத்திற்காக நான் வேலை செய்யவில்லை, அந்த படம் என்னுடைய படைப்பு, என் கனவு.
படத்தின் பட்ஜெட் ஒரு கோடி ரூபாய், என்னை நம்பி தயாரிப்பாளர் என்மீது நம்பிக்கை வைத்து படத்தை தயாரித்ததால், அந்த நம்பிக்கை தான் என் சம்பளம் என நினைதேன். புலன் விசாரணை வெளியாகும் முன் என் வீட்டு வாடகையை கூட கொடுக்க முடியாத சூழல், ஆனால் படம் வெளியாகிய அடுத்தநாள் நான் கோடீஸ்வரனாகிவிட்டேன்.
அது தான் என் உழைப்புக்கான வெகுமதியாக நான் பார்க்கிறேன் என்று ஆர் கே செல்வமணி பத்திரிக்கையாளர்களின் கூறியிருக்கிறார்.