அஜித் பத்தி பேச உனக்கு அறுகதை இல்லை!! புளூ சட்டையை கிளித்து தொங்கவிட்ட நடிகர்கள்..
நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்று தியேட்டரில் ஒளிப்பரப்பாகி வருகிறது. ஆனால் ஒருசில விமர்சனங்கள் படத்தின் விமர்சனங்களாக இல்லாமல் அஜித்தில் உடல் கேலியை வைத்தே அமைந்துள்ளதை கண்டித்து பலர் பேசி வருகிறார்கள்.
ஆரி ஆவேசம் :
சமீபத்தில் நடிகரும் பிக்பாஸ் வின்னருமான ஆரி புளூ சட்டை மாறனின் வலிமை விமர்சனத்தை பற்றி கிழித்து தொடங்க விட்டுள்ளார். ஒரு படம் நல்லா இருக்கும் நல்லா இல்லை என்று கூறி விமர்சனம் செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் தரம் தாழ்த்தி விமர்சனம் செய்தி காசு சம்பாதிப்பது கண்டனத்திற்கு உரியது. எங்கள் படம் நன்றாக இல்லை என்று கூறி அதில் வரும் வியாபாரத்தின் காசை தயாரிப்பாளர்களுக்கு கொடுப்பதில்லை. இதே சினிமாவில் இருந்து இப்படி விமர்சனம் செய்வது தவறான ஒன்று என்று கூறியுள்ளார். ப்ளூ சட்டை மாறன் அவர்களே உங்களின் விமர்சனத்தின் தரத்தினை கூட்டுங்கள்.
ஆர் கே சுரேஷின் கோபம் :
தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ் நடிப்பில் வெளியாகவுள்ள படம் விசித்திரன். இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் ஆர் கே சுரேஷ் காட்டமாக பேசியுள்ளார். குண்டக்க மண்டக்க என்று யாரும் விமர்சனம் கூறாதீர்கள். அஜித் பத்தி பேச யாருக்கும் அறுகதை கிடையாது. சினிமாக்காரங்களையே சினிமாக்காரர்கள் கொல்லாதீர்கள். ஒரு மனிதனை பற்றிய கலர் மற்றும் உடலை பற்றி விமர்சனம் செய்ய யாருக்கும் துப்பு கிடையாது யாரு நீ வெண்ண என்று கூறி காட்டமாக பேசியுள்ளார்.