18 வயதில் திருமணம், பெற்ற மகளே சொன்ன வார்த்தை.. ராபர்ட் மாஸ்டர் அப்பா கண்ணீர்!
ராபர்ட் மாஸ்டர்
விஜய், சிம்புவை வைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் ராபர்ட் மாஸ்டர். இடையில் சில காரணங்களால் சினிமா பக்கம் காணாமல் போன ராபர்ட் மீண்டும் ஒரு ரவுண்ட் வர ஆரம்பித்தார்.
அந்த நேரத்தில் அவருக்கு பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொள்ளும் வாய்ப்பு வர அதில் கலந்துகொண்டார்.
அப்பா கண்ணீர்!
சமீபத்தில், அவரது அம்மா மறைந்த நிலையில், தற்போது அவரது அப்பா பேட்டி ஒன்றில் ராபர்ட் மாஸ்டர் தனிப்பட்ட வாழ்வில் எதிர்கொண்ட சோகமான விஷயம் குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில், " என் மகன் 18 வயதில் ஒரு பெண் நடனக் கலைஞரைக் காதலித்தார். அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்தபோது ஒரு குழந்தை பிறந்தது. துரதிர்ஷ்டவசமாக, அந்தக் குழந்தைக்கு இரண்டு வயது இருக்கும்போது, ராபர்ட்டும் அவரது மனைவியும் பிரிந்துவிட்டனர்.
அதன் பின், அவர்கள் இருவரும் சந்தித்து கொள்ளவில்லை. ஒருநாள் ராபர்ட் தனது காரில் சென்றுகொண்டிருந்தபோது, தனது முன்னாள் மனைவியையும், மகளையும் ஸ்கூட்டரில் பார்த்துள்ளார்.
அப்போது, ராபர்ட்டின் முன்னாள் மனைவி பேசிவிட்டு செல்லும்போது, அவரது மகளிடம் மாமாவுக்கு குட்பை சொல்லு என்று கூறிவிட்டார். இதை கேட்டு ராபர்ட் கண்ணீர் விட்டு அழுதுவிட்டார்.